ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த நடிகர் சூர்யா என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா குடும்பத்திற்கு தகுந்த பாடம் புகட்ட புறக்கணிப்போம் ரெட்ரோ படத்தை!! சினிமாவில நிறைய பேர் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக்கொண்ட செல் தட்டி சிவகுமார் குடும்பம்!! ” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றாரா ஈபிஎஸ்?
Fact Check/Verification
ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த நடிகர் சூர்யா என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியப்போது “தம்பி Suriya-க்கு நடந்த கொடுமை உடைச்சு எறிஞ்சு Phoenix மாதிரி வருவாரு” என்கிற தலைப்பில் கடந்த டிசம்பர் 18, 2024 அன்று சமுத்திரக்கனி SS Music ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டி நமக்கு கிடைத்தது.
அதில், “என்னுடன் நடித்த நடிகர்களிலேயே நான் வியக்கும் ஒருவர், இந்த சமூகத்தின் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ள ஒருவர் நடிகர் சூர்யா. அற்புதமான ஒரு மனிதர். போராடி போராடி தன்னுடைய நடிப்பை திறம்பட கொடுப்பவர். அவர் மீதான விமர்சனங்கள் மிகுந்த வலியைக் கொடுக்கிறது. இந்த சமூகத்திற்காக பல்வேறு அறங்களை செய்த மனிதர் அவர். பீனிக்ஸ் பறவை போல விமர்சனங்களில் இருந்து மீண்டு வருவார்” என்பதாக பேசியிருந்தார். திரைப்பட விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு தனிமனித தாக்குதல் எவ்வாறு நடிகர்களை பாதிக்கிறது என்று நடிகர் சூர்யா குறித்து பேசியிருந்தார் சமுத்திரக்கனி. அதனையே திரித்து தவறாக பரப்பி வருகின்றனர்.
Also Read: மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த நடிகர் சூர்யா என்று பரவும் வீடியோ தகவல் திரிக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, SS Music, dated December 18, 2024