Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள்
பரவும் வீடியோ மகாராஷ்டிரா ராய்காட்டில் நடைபெற்ற காட்கோட் மோஹிம் ஊர்வலம் ஆகும்.
மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“அனைத்து மாநிலங்களில் இருந்தும் வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் #காவி போராளிகள். மேற்குவங்காளம் #ஹிந்து மக்களை காக்க மிக பெரிய படையே சென்று கொண்டு இருக்கிறது…இனிமேல் ஹிந்துக்கள் மீது எவனும் கை வைக்க கனவிலும் நினைக்க மாட்டார்கள்…ஜெய்ஸ்ரீராம்!..ஜெய்ஸ்ரீராம்..!!” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தாரா ஜெயக்குமார்?
மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 11, 2025 அன்று “Shiv Pratishthan Hindustan Gadkot campaign, Sambhaji Bhide’s Dharkari at Raigad” என்கிற தலைப்பில் மகாராஷ்டிராவில் இந்த ஊர்வலம் நடைபெற்றதாக ABP majha வெளியிட்டிருந்த செய்தியில் இந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், வைரலாகும் அதே வீடியோ Dj Abhijit Patil என்கிற நபரின் யூடியூப் பக்கத்தில் “Gadkot Mohim 2025 ” என்கிற பெயரில் கடந்த மார்ச் 02, 2025ல் இடம்பெற்றிருப்பதைக் காண முடிந்தது.
சம்பாஜி பிடே என்பரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படும் காட்கோட் மோஹிம் என்னும் இந்த ஊர்வலம் வருடம்தோறும் சத்ரபதி சிவாஜியின் மராத்திய பேரரசின் நினைவாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வுடன் தொடர்புடைய வீடியோவே தற்போது மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரப்பப்படுகிறது.
Also Read: முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் அண்மையில் கூறினாரா?
மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ மகாராஷ்டிரா ராய்காட்டில் நடைபெற்ற காட்கோட் மோஹிம் ஊர்வலம் என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, ABP MAJHA, Dated February 11, 2025
YouTube Video From, DJ Abhijith, Dated March 02, 2025
YouTube Video From, Sri Shivapratishthan Hindustan(श्री शिवप्रतिष्ठान हिन्दुस्थान), Dated January 08, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 5, 2024
Vijayalakshmi Balasubramaniyan
December 4, 2024