பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜன் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு, புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது.

Fact Check/ Verification:
சசிகலா நடராஜன், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமானவர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதியன்று விடுதலையாக இருக்கிறார்.
இந்நிலையில், காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறால் திடீரென்று உடல்நலம் குன்றிய அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்கிற முடிவுகள் வந்திருந்தாலும் கூட, அவரது ரத்த ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் அதற்கான சிகிச்சைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலா நடராஜனின் உடல்நலம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ள ஊடகம் ஒன்று சசிகலா நடராஜன் புகைப்படத்திற்கு பதிலாக, சசிகலா புஷ்பா என்பவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து வாசகர்களுக்கு தெரிவிக்க, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் விளக்கமளித்துள்ளோம்.
உண்மையும் பின்னணியும்:
சசிகலா நடராஜனின் உடல்நலம் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள அச்செய்தி ஊடகம், தவறுதலாக வி.கே.சசிகலா என்னும் சசிகலா நடராஜனின் புகைப்படத்திற்கு பதிலாக முன்னாள் எம்.பியான சசிகலா புஷ்பா என்பவரின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
அக்குறிப்பிட்ட செய்தி தளத்தின் ட்விட்டர் பதிவின் கீழேயே அதற்கான விளக்கங்களும் பயனர்களால் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், 2020, டிசம்பர் 8 ஆம் தேதியன்று சசிகலா புஷ்பா மேடையில் உரையாற்றிய காணொளி ஒன்றினையும் கீழே இணைத்துள்ளோம்.
கூடவே, சசிகலாவின் புகைப்படத்துடன் கூடிய சில தமிழக ஊடகங்களின் செய்திகளையும் கீழே இணைத்துள்ளோம்.
இருவருடைய புகைப்படத்தையும் இங்கே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Conclusion:
எனவே, சசிகலா நடராஜனின் உடல்நலம் குறித்த செய்தியில் குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படம் தவறானதாகும். அதிலிருப்பவர் சசிகலா புஷ்பா என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் விளக்கியுள்ளோம்.
Result: Misleading
Our Sources:
Puthiyathalaimurai: https://twitter.com/PTTVOnlineNews/status/1352171526993285120?s=20
News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1352176440897228801?s=20
YouTube: https://www.youtube.com/watch?v=zv38t6ZtYjk
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)