Fact Check
சாட்டை துரைமுருகன் கடற்கரையில் நடனமாடியதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
சாட்டை துரைமுருகன் கடற்கரையில் நடனமாடியதாக பரவும் வீடியோ

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: தவெக தலைவர் விஜய் ஹல்க் ஹோகனுக்கு அஞ்சலி செலுத்தியதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
Fact
யூடியூபரும் நாதக ஆதரவாளருமான சாட்டை துரைமுருகன் கடற்கரையில் நடனமாடியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வில் வைரலாகும் இவ்வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் முகம் மாற்றப்பட்ட போலியான வீடியோ என அறிய முடிந்தது.
கேரளாவை சார்ந்த பிரவீன் என்பவர் ஜூலை 10 அன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவ்வீடியோவை செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்து பிரவீனுக்கு பதிலாக துரைமுருகனின் முகம் மாற்றப்பட்டு வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

வைரலாகும் வீடியோவிலேயே சில இடங்களில் துரைமுருகனுக்கு பதிலாக பிரவீனின் முகம் தெரிவதை நம்மால் காண முடிந்தது.

Also Read: நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டாரா?
இதேபோல் ஏற்கனவே பிரவீன் அவரது சகோதரியுடன் ஆடிய மற்றொரு வீடியோவை சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம் ஆடுவதாக பரப்பப்பட்டது.
அச்சமயத்தில் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆராய்ந்து அத்தகவல் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டது. அதுகுறித்த செய்தியை இங்கே காணலாம்.
பிரவீனும் இதுக்குறித்து மறுப்பு அளித்திருந்தார்.
Sources
Instagram, post by Praveen, dated July 10, 2025