Fact Check
சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim
சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம்
Fact
வைரலாகும் வீடியோவில் இருப்பவர் பிரவீன் என்கிற கலைஞர் ஆவார்.
சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம் ஆடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”டேய் @Saattaidurai என்னடா நடக்குது அங்க? கூட ஆடுறது யாருடா? உன்னை ஏன் எல்லாரும் மாமா பயன் சொல்றங்கனு இப்பதாண்டா புரியுது” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் இருப்பவர் சாட்டை துரைமுருகன் ஜாடையில் இருக்கும் மற்றொரு நபர் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, அந்த வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அதில் இடம்பெற்றிருக்கும் நபர் கேரளாவைச் சேர்ந்த பிரவீன் என்பது நமக்குத் தெரிய வந்தது.
அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் ”90’s kid wth 20’s kid” என்கிற தலைப்பில் இந்த நடன வீடியோ கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருந்தது. மேலும், அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் இதே போன்று பல்வேறு வீடியோக்கள் இடம்பெற்றிருந்ததுடன் அவருடைய பயோவில் அவர் ஒரு கலைஞர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியன்று பதிவிடப்பட்டு, அதில் தன்னுடைய இந்த வீடியோவிற்கு 11 லட்சம் பார்வைகள் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நாம் நியூஸ்செக்கர் சார்பில் பிரவீனைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த வீடியோவில் இருப்பது அவர்தான் என்பதை உறுதி செய்ததுடன், அவருடன் நடனம் ஆடும் பெண் அவரது சகோதரி மகள் என்றும் விளக்கமளித்தார்.
எனவே, இந்த வீடியோவில் இருப்பர் பிரவீன் என்கிற நபர், சாட்டை துரைமுருகன் அல்ல என்பது உறுதியாகிறது.
Also Read: ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Conclusion
சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post from Praveen Meppayur, Dated April 06, 2025
Phone Conversation with, Praveen Meppayur, (By Sabloo, News Checker) Dated May 05, 2025