Fact Check
இந்து பெண்களை ஏமாற்றி விற்க முயற்சித்த கும்பலை தடுத்த இந்து இளைஞர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claim: இந்து பெண்களை ஏமாற்றி விற்க முயற்சித்த கும்பலை தடுத்த இந்து இளைஞர்
Fact: வைரலாகும் வீடியோ சித்தரிக்கப்பட்டதாகும்.
இந்து பெண்களை ஏமாற்றி விற்க முயற்சித்த கும்பலை தடுத்த இந்து இளைஞர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”ஹிந்து சொந்தங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு. வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி ஹிந்து பெண்களை அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஒரு ஹிந்து இளைஞர்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: “திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?
Fact Check/Verification
இந்து பெண்களை ஏமாற்றி விற்க முயற்சித்த கும்பலை தடுத்த இந்து இளைஞர் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வைரல் பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோவிலேயே 0.11 நொடிகளில் “இந்த வீடியோ பொழுதுபோக்கு அம்சத்திற்காக உருவாக்கப்பட்டது” என்கிற விளக்கக்குறிப்பை நம்மால் காண முடிந்தது.

எனவே, வைரல் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது “Naveen Jangra” என்கிற யூடியூபர் இந்த வீடியோவைக் கடந்த பிப்ரவரி 12, 2023 அன்று பதிவிட்டிருந்தார்.
யூடியூபில் இதுபோன்ற பொழுதுபோக்கு மற்றும் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் இவர். அப்படி ஒரு சித்தரிக்கப்பட்ட இவருடைய வீடியோவே தற்போது உண்மையான வீடியோ என்று பரவுகிறது.
Conclusion
இந்து பெண்களை ஏமாற்றி விற்க முயற்சித்த கும்பலை தடுத்த இந்து இளைஞர் என்று பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video From, Naveen Jangra, Dated Februry 12, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)