Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ஸ்டாலின் ஆட்சியில் அரசு மருத்துவமனை காவலர் ரவுடிபோல் அராஜகம் செய்ததாக பரவும் வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் 2019 ஆம் ஆண்டில் நடந்ததாகும். அச்சமயத்தில் அதிமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. இச்சம்பவத்திற்கும் நடந்துக்கொண்டிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.
“விடியா நிர்வாக திறனற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சேலம் அரசு மருத்துவமனையில் காவலராக பணி அமர்த்தப்பட்ட ரவுடியின் அராஜகம்!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஸ்டாலின் ஆட்சியில் ரேஷன் கடையில் முறைகேடு நடந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
ஸ்டாலின் ஆட்சியில் அரசு மருத்துவமனை காவலர் ரவுடிபோல் அராஜகம் செய்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் சேலத்தில் நேஷ்னல் லா ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பை நடத்தி வரும் வழக்கறிஞர் சேதுபதி மாரியப்பன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 03, 2019 அன்று வைரலாகும் இதே வீடியோவை பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
அப்பதிவில் செப்டம்பர் 04, 2019 அன்று இச்சம்பவம் குறித்து சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கவிருப்பதாவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே சேதுபதி மாரியப்பனை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து விசாரித்தோம். வீடியோவில் காணப்படும் காவலாளி தனியார் செக்யூரிட்டி காவலர் என்றும், அவர்கள் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் புகாரளித்ததை தொடர்ந்து அந்த காவலாளி பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் சேதுபதி தெரிவித்தார்.
இதனையடுத்து தேடுகையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் 2019 ஆம் ஆண்டில் நடந்தது என்று தமிழ்நாடு தகவல் சரிப்பார்ப்பகமும் அதன் எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்திருந்ததை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் 2019 ஆண்டில் நடந்துள்ளது என தெளிவாகின்றது. ஆனால் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 ஆம் ஆண்டே பொறுப்புக்கு வந்தது. ஆகவே ஸ்டாலினின் ஆட்சியில் இச்சம்பவம் நடந்ததாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியாகின்றது.
Also Read: இந்துக்கள் அசைவம் உண்பதை மத்திய அரசு தடை செய்யவேண்டும் என்றாரா ஹெச்.ராஜா?
ஸ்டாலின் ஆட்சியில் அரசு மருத்துவமனை காவலர் ரவுடிபோல் அராஜகம் செய்ததாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் 2019 ஆம் ஆண்டில் நடந்ததாகும். அச்சமயத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவாகும். ஆகவே அச்சம்பவத்திற்கு ஸ்டாலின் தலைமையிலான் திமுக ஆட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook post from Adv.Sethupathi Mariyappan, Founder/Director, National Law Foundation, Salem, Dated September 03, 2019
Phone Conversation with Adv.Sethupathi Mariyappan, Founder/Director, National Law Foundation, Salem
X post by TN Fact Check, February 04, 2025
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Vijayalakshmi Balasubramaniyan
March 20, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 18, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 17, 2025