Fact Check
விஜய்யை கூட்டணிக்கு அழைத்தாரா சீமான்?

Claim: விஜய்யை கூட்டணிக்கு அழைத்தார் சீமான்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். சீமான் இவ்வாறு கூறவே இல்லை.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயை கூட்டணிக்கு அழைத்ததாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அந்த நியூஸ்கார்டில், “விஜய் விரும்பினால் 2026 ல் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க நாதக தயாராக உள்ளது நான் முதல்வர்; தம்பி விஜய் துணை முதல்வர்; புஸ்ஸிக்கு வேண்டுமானால் நிதித்துறை தருகிறோம்” என்று சீமான் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பணமதிப்பிழப்பை மலையாள இளைஞன் கிண்டலடித்து பாடியதாக பரவும் எடிட் வீடியோ!
Fact Check/Verification
சீமான் விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறினாரா என தேடினோம்.
இத்தேடலில் “மக்கள் மனதை விஜய் வெல்லுவாரா? சீமான் பதில்!” என்று தலைப்பிட்டு சமயம் செய்திகள் யூடியூப் பக்கத்தில் பிப்ரவரி 03, 2024 பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் நடிகர் விஜயுடன் 2026 தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, “அதை தம்பிதான் (விஜய்) முடிவு பண்ணனும்” என்று சீமான் பதிலளித்திருப்பதை காண முடிந்தது.
இந்த வீடியோவில் எந்த ஒரு இடத்திலும் சீமான் விஜயை கூட்டணிக்கு அழைக்கவில்லை. அதேபோல் விஜய்க்கு துணை முதல்வர் தருகின்றோம், புஸ்ஸி ஆனந்துக்கு நிதித்துறை தருகின்றோம் எனவும் அவர் பேசி இருக்கவில்லை.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் மேற்கண்ட தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது. இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் 18 தமிழ்நாடின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் ‘பெயர் நன்றாக இருக்கிறது – சீமான்’ என்று தலைப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்றை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனைத் தொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாடின் டிஜிட்டல் துறை பொறுப்பாளர் முருகதாஸை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்றாரா துரைமுருகன்?
Conclusion
சீமான் விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக நமக்கு புலனாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from News 18 Tamilnadu, Dated February 02, 2024
Phone Conversation with Murugadoss, News 18 Tamilnadu
Youtube Video from Samayam Seithigal, Dated February 03, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)