Fact Check
சீமான் பேசும்போது குறுக்கிட்ட விஜய் பாடல்கள்; கடுப்பாகிய சீமான்.. வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Claim
சீமான் பேசும்போது விஜய் பாடல்கள் குறுக்கிட்டு ஒலித்ததால் சீமான் கடுப்பானார்.
Fact
வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். அச்சமயத்தில் உண்மையில் ரத்தக்கொதிப்பு என்கிற பாடலே ஒலித்தது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாதக தலைவர் சீமான் பேசும்போது தவெக மாநாட்டு பாடல்கள் மற்றும் விஜயின் திரைப்பட பாடல்கள் தொடர்ந்து ஒலித்ததால் சீமான் கடுப்பாகியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெகவில் திரிஷாவுக்கு முக்கிய பொறுப்பு.. ஜூனியர் விகடன் செய்தி படம் வெளியிட்டதா?
Fact Check/Verification
சீமான் பேசும்போது விஜய் பாடல்கள் குறுக்கிட்டு ஒலித்ததால் சீமான் கடுப்பானதாக பரவும் வீடியோவில் சீமான் கையில் ஒலி வாங்கி சின்னத்தையுடைய பலகை இருப்பதை காண முடிந்தது.
கடந்த வருடம் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.22 சதவீதம் வாக்குகளை பெற்றதால் தேர்தல் ஆணையம் அக்கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்து விவசாயி சின்னத்தை அக்கட்சிக்கு ஒதுக்கி இருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் நாதகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒலிவாங்கி சின்னத்தை சீமான் ஏந்தியிருப்பது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆகவே வைரலாகும் வீடியோ குறித்த உண்மையை அறிய, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் “மைக் சின்னம் அறிவிக்கும் போது சத்தமாக ஒலித்த ‘ரத்தகொதிப்பு’ ரிங்டோன் – கடுப்பான சீமான்” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து மாலை மலரில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாதகவுக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கியதை தொடர்ந்து, சீமான் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சின்னத்தை வெளியிட்டதாகவும், அதை தொடர்ந்து அவர் பேசுகையில் சீமானின் பின்னாள் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங்டோன் ‘ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு’ என்கிற பாடலுடன் சத்தமாகஒலித்ததால் சீமான் கோபப்பட்டதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் “ரத்த கொதிப்பு ! ரத்த கொதிப்பு ! – கடுப்பான சீமான்” என்கிற தலைப்பில் மார்ச் 28, 2024 அன்று நியூஸ் 18 தமிழ் யூடியூப் பக்கத்தில் ஷார்ட்ஸ் வடிவில் இச்சம்பவ வீடியோ வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த வீடியோவில் ரத்தக்கொதிப்பு பாடல் ரிங்டோனாக ஒலிப்பதையும், சீமான் கடுப்புடன் திரும்புவதையும் காண முடிகின்றது.
இதனையடுத்து தேடுகையில் தினமணி, தந்தி டிவி, பாலிமர் நியூஸ், ஐபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இதே தகவலுடன் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: பெரியாருடன் விஜய் நிற்கும் சிலை; வைரலாகும் படம் உண்மையானதா?
Conclusion
சீமான் பேசும்போது விஜய் பாடல்கள் குறுக்கிட்டு ஒலித்ததால் சீமான் கடுப்பானதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். அச்சமயத்தில் உண்மையில் ரத்தக்கொதிப்பு என்கிற பாடலே ஒலித்தது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Media report by Maalaimalar, dated March 27, 2024
Media report by News 18 Tamil Nadu, dated March 28, 2024
Media report by Dinamani, dated March 27, 2024
Media report by Thanthi TV, dated March 27, 2024
Media report by Polimer News, dated March 27, 2024
Media report by IBC Tamil, dated March 27, 2024