Fact Check
தவெகவில் திரிஷாவுக்கு முக்கிய பொறுப்பு.. ஜூனியர் விகடன் செய்தி படம் வெளியிட்டதா?
Claim
தவெகவில் திரிஷாவுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க விஜய் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக ஜூனியர் விகடன் செய்தி படம் வெளியிட்டது.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வணங்கிய திருவள்ளுவர் சிலை விபூதி அணிந்திருந்ததா?
Fact
தவெகவில் திரிஷாவுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க தவெக தலைவர் விஜய் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக ஜூனியர் விகடன் செய்தி படம் வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் செய்தி படத்தின் மேற்பகுதியில் ‘14.9.2025’ என்கிற தேதி இடம்பெற்றிருந்தது. கூடவே அன்றைய இதழின் அட்டைப்படமும் இடம்பெற்றிருந்தது.

இதை ஆதாரமாக வைத்து தேடியதில் “”புது ரூட்டில் நா.த.க… சீமான்-சபரீசன் சந்திப்பு!” – மிஸ்டர் கழுகு” என்று குறிப்பிட்டு ஜூனியர் விகடன் செய்தி படம் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இப்படத்தை வைரலாகும் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் செய்தி படம் எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி படம் என அறிய முடிந்தது.


இதனையடுத்து விகடன் ஆசிரியர்களுள் ஒருவரான பிரிட்டோவை தொடர்புக்கொண்டு பேசுகையில், அவரும் அப்படம் போலியான செய்தி படம் என உறுதி செய்தார்.
Sources
X post by Junior Vikatan, dated September 9, 2025
Phone Conversation with Britto, Editor, Vikatan