Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சக்திமான் ஹீரோ மரணம்
சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
90களில் வளர்ந்தவர்களுக்கு பிடித்தமான சீரியல் சக்திமான். இந்த சீரியலின் நாயகன் இறந்தததாக கூறி அவரது படத்தை பலர் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவரது பெயர் ராஜூ ஸ்ரீவஸ்தவா என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக ‘ராஜூ ஸ்ரீவஸ்தவா’ எனும் கீவேர்டை பயன்படுத்தி கூகுளில் தேடியதில் அவர் ஒரு காமெடி நடிகர் என்பதும், இவர் சக்திமான் தொடரில் கஜோதர் எனும் பாத்திரத்தில் நடித்தவர் என்பதும் தெரிய வந்தது. ஆனால் இவர் இத்தொடரின் கதாநாயகன் அல்ல. ராஜு ஸ்ரீவஸ்தவா மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 41 நாட்கள் சிகிச்சைக்குப்பின், சிகிச்சை பலனின்றி கடந்த புதனன்று காலமாகியுள்ளார்.
இதனையடுத்து சக்திமான் தொடரின் நாயகனின் பெயர் என்ன என்று தேடியதில் அவரது பெயர் முகேஷ் கண்ணா என்பது தெரிய வந்தது. இதனையடுத்து முகேஷ் கண்ணா ராஜூ ஸ்ரீவஸ்தவுடன் அவர் அனுபவம் குறித்து ஜீ நியூஸுக்கு அளித்த பேட்டி ஒன்றையும் காண முடிந்தது.
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில், சக்திமான் நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மரணமடைந்ததை, அத்தொடரின் நாயகன் முகேஷ் கண்ணா மரணமடைந்தார் என தவறாகப் புரிந்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்தி பதிவு செய்து வருகின்றனர் என அறிய முடிகின்றது.
மேலும் இதுப்போன்ற கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023