Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்.
Fact: இத்தகவல் தவறானதாகும். ஊதியம் தராததால் கோபமடைந்த ஊழியர்கள் இச்செயலை செய்துள்ளனர்.
“சோலார் பேனலினால் சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று ஒரு முட்டா பய பண்டிதன் பேசினதை கேட்டு சோலார் பேனலை உடைக்கும் அறிவற்ற மாட்டு மூளை கூட்டம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?
சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை மக்கள் உடைத்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் கிளைமேட் சாமுராய் எனும் இணைய ஊடகத்தில் ‘Watch: Solar panels at 100 Mw solar plant in Maharashtra vandalized due to non payment of wages’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியானது பிப்ரவரி 15, 2018 அன்று வெளியிடப்பட்டிருந்தது.
இச்செய்தியில் ஊதியம் தராததால் சோலார் பேனல்களை ஊழியர்கள் அடித்து உடைத்ததாக கூறப்பட்டிருந்தது. இச்சம்பவமானது மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சாலிஸ்கான் நகரத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் கோ நியூஸ் இந்தியாவின் டிவிட்டர் பக்கத்திலும் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியிலும் ஊதியம் தராததாலேயே சோலார் பேனல் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?
சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை மக்கள் உடைத்ததாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். உண்மையில் ஊதியம் தராததால் கோபமடைந்த ஊழியர்கள் இச்செயலை செய்துள்ளனர். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Climate Samurai, Dated February 15, 2018
X post from Go News India, Dated February 21, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 5, 2025
Ramkumar Kaliamurthy
March 25, 2025
Ramkumar Kaliamurthy
January 22, 2025