Fact Check
‘பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்’ என்று பரவும் வீடியோவின் உண்மை பின்னணி!
Claim
‘பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்’ என்று பரவும் வீடியோ.
Fact
வைரலாகும் வீடியோவில் காணப்படும் சந்திப்பு நடந்த சமயத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இல்லை. அதேபோல் அவ்வீடியோவில் காணப்படுபவர் சீன அதிபர் இல்லை.
“பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்… இந்த வீடியோ தானே தேடிகிட்டு இருந்தீங்க நீங்க… பாவம் சிங் சார்..” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை காட்டிலும் சோனியா காந்திக்கு அதிக முக்கியத்துவம் தருவதாய் காணப்பட்டது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரதமரின் தாயை தரக்குறைவாக பேசியவர் பாஜகவை சார்ந்தவர் என்று பரவும் தகவல் உண்மையானதா?
Fact Check/Verification
‘பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்’ என்று பரவும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் காங்கிரஸ் தலைவர் சீன தூதுக்குழுவினரை சந்தித்ததாக கூறி ஜூன் 16, 2015 அன்று இந்திய தேசிய காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோ பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் மே 26, 2014 அன்றே முடிந்து விட்டது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை நரேந்திர மோடியே பிரதமராக இருந்து வருகின்றார். வைரலாகும் வீடியோவில் காணப்படும் சந்திப்போ ஜூன் 2015-ல் நடந்துள்ளது. இதன்படி பார்க்கையில் அச்சந்திப்பு நடந்த தினத்தில் மன்மோகன் சிங் பிரதமராகவே இல்லை என தெளிவாகின்றது.
தொடர்ந்து தேடுகையில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இச்சந்திப்பு குறித்த புகைப்படங்களுடன் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் மன்மோகன் சிங்கை முன்னாள் பிரதம மந்திரி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல் 2013 ஆம் ஆண்டிலிருந்து ஜி ஜின்பிங்கே சீனாவின் அதிபராக உள்ளார். ஆனால் வைரலாகும் வீடியோவில் அவர் இல்லை.
வைரலாகும் வீடியோவிலிருப்பவர் யார் என்பது குறித்து தேடுகையில் அவர் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சாங் டெய்ஜாங் என பிரதம மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்தி வெளியீட்டின் வாயிலாக அறிய முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பாரக்கையில் தெளிவாகுவது யாதெனில்,
- மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டவர்கள் சந்தித்தது சீனாவின் அதிபரை அல்ல; தூதுக்குழுவின் தலைவர் சாங் டெய்ஜாங்கையாகும். அவர் அச்சமயத்தில் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார்.
- வைரலாகும் வீடியோவிலிருக்கும் சந்திப்பு நடந்தபோது மன்மோகன் சிங் பிரதமராக இல்லை.
Also Read: பிரதமர் மோடிக்கு சீனா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
‘பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்’ என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By Congress, Dated June 16, 2015
YouTube Video By Congress, Dated June 16, 2015
Data from Pradhanmantri Sangrahalaya Website
Press Release from Prime Minister Office, Dated June 15, 2015
Media article by AP News, Dated October 24, 2022
இத்தகவலானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே ஃபேக்ட் செக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்.