Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வை விமானத்தில் இருந்து படம்பிடித்த காட்சி
Fact: வைரலாகும் வீடியோ செய்தி தவறானதாகும்.
சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வு, டாக்காவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த விமானப்பயணி ஒருவரால் படம்பிடிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
“டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து சந்திரயான் 3 ராக்கெட் ஏவபட்ட காட்சி” என்று தினமலர் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும், சமூக வலைத்தளப்பயனாளர்களும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சந்திரயான்-3 வெற்றிக்கு கடவுள் வெங்கடாசலபதியே காரணம் என்றாரா நாராயணன் திருப்பதி?
Fact Check/Verification
சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வை விமானத்தில் இருந்து படம்பிடித்த காட்சி என்று பரவும் வீடியோ செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது NasaNet என்கிற பேஸ்புக் பக்கத்தில் கடந்த டிசம்பர் 24, 2022 அன்று வெளியாகியிருந்த வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது. அந்த வீடியோவும் தற்போது சந்திரயான்-3 என்று வைரலாகும் வீடியோவும் ஒன்றே என்பதை நம்மால் அறிய முடிந்தது.
அதன் தலைப்பில், “The coincidence of going on a plane just when the SpaceX Falcon 9 is being launched at Cape Canaveral” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, டிசம்பர் 2022 அன்று Independent ஊடகத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில், “Space X ராக்கெட் விண்ணில் பாய்ந்த நிகழ்வை விமானத்தில் இருந்து படம்பிடித்த பயணி” என்கிற தலைப்பு இடம்பெற்றுள்ளது. NDTV கட்டுரையிலும் ஃப்ளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட Space X Falcon 9 ராக்கெட் விண்ணில் பாய்ந்த காட்சி என்றே இந்த வீடியோ குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபற்றி ஆராய்ந்தபோது கடந்த 2021 ஆம் ஆண்டு CNBC வெளியிட்டிருந்த “Elon Musk says SpaceX has started building a Starship launchpad on Florida’s Space Coast” என்கிற கட்டுரை நமக்குக் கிடைத்தது. அதில் உள்ள Kennedyspacecentre ஃப்ளோரிடா ராக்கெட் ஏவுதளமும் வைரலாகும் வீடியோவில் உள்ள ஏவுதளமும் ஒன்றே என்பதை அறிய முடிந்தது.
இதன்மூலம், வைரலாகும் வீடியோ சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்பட்டபோது படம்பிடிக்கப்பட்ட காட்சியல்ல என்பதை அறிய முடிகிறது.
Also Read: Fact Check: இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வை விமானத்தில் இருந்து படம்பிடித்த காட்சி என்று பரவும் வீடியோ செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Facebook Post From, NasaNet, Dated December 24, 2022
News Article From, Independent, Dated December 16, 2022
News Report From, CNBC, Dated December 03, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.