திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkசந்திரயான் 3 ராக்கெட் லாரியில் பாலத்தை கடந்த வீடியோவா இது?

சந்திரயான் 3 ராக்கெட் லாரியில் பாலத்தை கடந்த வீடியோவா இது?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சந்திரயான் 3 ராக்கெட் லாரியில் பாலத்தை கடந்த வீடியோ

Fact: வைரலாகும் வீடியோ ஒரு வீடியோகேம் வீடியோவாகும்.

“சந்திரயான் 3 பெங்களூரிலிருந்து  ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை கடக்கும்போது லாரி டிரைவர் எவ்வளவு மன அழுத்தத்தை எடுக்க வேண்டியிருந்தது என்பதைப் பாருங்கள். ஆகஸ்ட் 23 மாலை 5 மணிக்கு நிலவில் தரையிறங்கி உலகமே நம்மை பார்த்து வியந்ததற்கு இந்த டிரக் டிரைவரும் ஒரு காரணம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சந்திரயான் 3 ராக்கெட் பாலத்தை கடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
Screengrab from X@passoupathy

X Link | Archived Link

சந்திரயான் 3 ராக்கெட் பாலத்தை கடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
Screengrab from X@bjp_anuradha

Archived Link

சந்திரயான் 3 ராக்கெட் பாலத்தை கடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
Screengrab from X@Moorthi45947098

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழ்நாட்டின் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் ‘மூன் வாக்’ சென்றாரா?

Fact Check/Verification

சந்திரயான் 3 ராக்கெட் லாரியில் பாலத்தை கடந்த வீடியோ என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோவில் காணப்படும் இடங்கள், வாகனங்கள் யாவும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதுபோல் இருப்பதை நம்மால் காண முடிந்தது.  

மேலும் வீடியோவின் வலது புற மூலையில் R மற்றும் D உள்ளிட்ட எழுத்துக்களை உள்ளடக்கிய லோகோ ஒன்று இருப்பதை காண முடிந்தது. இதை அடிப்படையாக வைத்து தேடியதில் அந்த லோகோ ராடியன் (Rahdian) எனும் ஃபேஸ்புக் பக்கத்தின் லோகோ என்பதையும், அப்பக்கத்தில் மார்ச் 06, 2023 அன்று வைரலாகும் இவ்வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதையும் அறிய முடிந்தது.

இந்த ஃபேஸ்புக் பக்கமானது ஒரு கேமிங் வீடியோ பக்கமாகும். Spintires: MudRunner எனும் வீடியோகேம் விளையாடுவதாக குறிப்பிட்டு இந்த வீடியோவானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

சந்திரயான் 3 ராக்கெட் பாலத்தை கடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

தொடர்ந்து தேடியதில் இதுபோன்று பல வீடியோக்கள் இப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

சந்திரயான் 3 ராக்கெட் பாலத்தை கடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

கிடைத்த ஆதாரங்களின்படி காண்கையில் வைரலாகும் வீடியோ ஒரு வீடியோகேம் என்பதும், அது சந்திரயான் 3 ராக்கெட் பாலத்தை கடந்த வீடியோ அல்ல என்பதும் தெளிவாகின்றது.

Also Read: ரெனால்ட்ஸ் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் உண்மையா?

Conclusion

சந்திரயான் 3 ராக்கெட் லாரியில் பாலத்தை கடந்த வீடியோ என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.  

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook video from rahdianhamdani, Dated March 06, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular