வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkதேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை என்றாரா மு.க.ஸ்டாலின்?

தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை என்றாரா மு.க.ஸ்டாலின்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவிய செய்திப் புகைப்படம் ஒன்றினை நமது வாசகர் ஒருவர் உண்மையறியும் சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தார்.

Source: Whatsapp

Fact Check/Verification:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் நாளொரு கட்சியின் பிரச்சாரமும், பொழுதொரு பிரச்சினைகளுமாக பரபரப்பாக செயல்பட்டு வருகின்றது.

தேசிய கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமிழகத்தைக் குறிவைத்து தொடர்ந்து பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் தமிழகம் வந்த பிரதமர் மோடி கூட, தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்கிற ஒரு பிரிவினரின் கோரிக்கையை ஏற்றிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், `திமுக கூட்டணி பலமான கூட்டணி. தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை. அவர்கள் ஓட்டுப் போட்டு நான் முதல்வராக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாகப் பரவும் செய்திப் புகைப்படம் ஒன்றினை நமக்குப் பகிர்ந்திருந்தார் வாசகர் ஒருவர்.

Source: Whatsapp

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்:

தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்கு தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற அச்செய்திப் புகைப்படத்தில் 12 அக்டோபர் 2020 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கிப் பார்த்தபோது கடந்த 2020ம் வருடமே சமூக வலைத்தளங்களில் அப்புகைப்படம் வைரலாகியதும், அதனைத் தொடர்ந்து ஒரு உண்மையறியும் சோதனையும் வெளியாகியிருப்பது நமக்குத் தெரிய வந்தது.

மேலும், சன் நியூஸ் சேனலின் லோகோ அதில் கொடுக்கப்பட்டுள்ளதாலும், ஆனால் அவர்களது நியூஸ்கார்ட் போலின்றி பிழைகள் காணப்பட்டதாலும் அது குறித்து அவர்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆராய்ந்தோம்.

அதில், குறிப்பிட்ட அந்த செய்தி புகைப்படத்தில், ‘திமுக கூட்டணியை அசைக்க முடியாது; திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று முயற்சிப்பவர்கள் கலகலத்துப் போவார்கள். அதீத கற்பனை, ஊகத்தின் அடிப்படையில் எதையாவது கூறி திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி’ என்று மு.க.ஸ்டாலின் கூறிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதனை எடிட் செய்து, குறிப்பிட்ட அந்த தேவேந்திரகுல வேளாளர்கள் செய்தியை அதில் சேர்த்துள்ளனர் என்பது நமக்குத் தெரிய வந்தது.

https://www.facebook.com/SunNewsTamil/photos/a.500433350013386/3626242810765742/
Source: Facebook

Archived Link: https://archive.vn/H5cNR

வாசகர்களில் புரிதலுக்காக உண்மையான புகைப்படச் செய்தியையும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Duplicate – Original

Conclusion:

`திமுக கூட்டணி பலமான கூட்டணி. தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை. அவர்கள் ஓட்டுப் போட்டு நான் முதல்வராக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியதாகப் பரவுகின்ற செய்திப் புகைப்படம் தவறானது; எடிட் செய்யப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources:

Sun News: https://www.facebook.com/SunNewsTamil

FC: https://tamil.factcrescendo.com/mk-stalin-not-commented-on-devendra-kula-vellala-vote-bank/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular