இஸ்லாமிய மாற்றுத்திறனாளிக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ஏன் இஸ்லாமியர் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளா இருக்காங்களா Mr.@mkstalin? தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா?” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
இஸ்லாமிய மாற்றுத்திறனாளிக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் புகைப்படத் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கும், டில்லி பாபு என்கிற மற்றொரு மாற்றுத்திறனாளிக்கும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் வழங்கப்பட்டது.
இவர்களுடன் இருவர் மட்டுமின்றி நிகழ்வில் இடம்பெறாத இன்னும் பல மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த நலத்திட்ட உதவி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி பெற்ற இஸ்லாமிய மாற்றுத்திறனாளி பெண்ணின் புகைப்படமும், டில்லி பாபுவின் வீடியோ காட்சியும் தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி, ”நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின் | நேரலை காட்சிகள் | இடம் : நாகப்பட்டினம்” என்கிற தலைப்பில் தந்தி டிவி வெளியிட்டுள்ள நேரலை செய்தியிலும் அவர்கள் இருவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட வாகனத்தை வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
ஆனால், இச்செய்தியை திரித்து இஸ்லாமிய மாற்றுத்திறனாளிக்கு மட்டும் நலத்திட்ட உதவியை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று இத்தகவல் பரப்பப்படுகிறது.
Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
இஸ்லாமிய மாற்றுத்திறனாளிக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.
அந்நிகழ்வில் அவர் மற்றொரு மாற்றுத்திறனாளியான டில்லி பாபு என்பவருக்கும் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட வாகனத்தை வழங்கியுள்ளார் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from ETV Bharat, dated March 03, 2025
YouTube Video From, Thanthi TV, Dated March 03, 2025
YouTube Video From, Kalaignar TV News, Dated March 03, 2025
Instagram Post From, tndipr, March 03, 2025