ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பினாரா பிரதமர்?

தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பினாரா பிரதமர்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை பரவும் அனுப்பவிருப்பதாக பரவும் தகவல்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது நீட் தேர்வு, எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட 35 முதன்மையான விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் ஸ்டாலின் பேசவிருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்  தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைத்து வர மோடி அவர்கள் புல்லட் புரூஃப் காரை அனுப்பவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை பரவும் அனுப்பவிருப்பதாக பரவும் தகவல் -1


Archive Link: https://archive.ph/pg0kV

இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை பரவும் அனுப்பவிருப்பதாக பரவும் தகவல் -2

Archive Link: https://archive.ph/0Y30C

இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை பரவும் அனுப்பவிருப்பதாக பரவும் தகவல் - 3

Archive Link: https://archive.ph/iQMZ2

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மது விலையேற்றதை எதிர்த்து நடிகை காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தினாரா?

Fact Check/Verification

மோடி அவர்கள் தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பவிருப்பதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

நம் ஆய்வில் இத்தகவல் தவறான ஒன்று என்பது நமக்கு தெரிய வந்தது. டெல்லி செய்தியாளர் அரவிந்த் குணசேகர் என்பவர் வைரலாகும் இத்தகவல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில்,

“சமூக  சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவலை நம்ப வேண்டாம். முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வாகனத்தை மட்டுமே பயன்படுத்த உள்ளார்.

இந்த வாகனத்தின் மூலமே பிரதமரையும் சந்திக்கவிருக்கின்றார்.”

என்று பதிவிட்டுள்ளார்.  

மேலும் மற்றொரு பதிவில் முதல்வர் பயன்படுத்தவிருக்கும் வாகனத்தின் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Archive

இதைத் தவிர்த்து ABP நாடு இணையத்தளத்திலும் வைரலாகும் இச்செய்தி தவறானது என்று செய்தி வெளியிடப்படப்பட்டுள்ளது.  

Source: ABP Naadu

Conclusion

மோடி  அவர்கள் தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பியதாக  சமூக வலைத்தளங்களில் வைரலான தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

ABP Naadu: https://tamil.abplive.com/news/india/mk-stalin-delhi-visit-modi-sends-his-bullet-proof-car-to-welcome-him-fake-news-6478

Aravind Gunasekar Twitter Handle: https://twitter.com/arvindgunasekar/status/1405430109952045057


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular