Sunday, December 21, 2025

Fact Check

Fact Check: இந்திய தயாரிப்பு Jet Pack Flying suit உடையை சோதனை முறையில் சரிபார்த்த இந்திய ராணுவம் என்று பரவும் தகவல் உண்மையா?

banner_image

Claim
இந்திய தயாரிப்பு Jet Pack Flying Suit உடையை சோதனை முறையில் சரிபார்த்த இந்திய ராணுவம்.

Fact
வைரலாகும் வீடியோவில் தங்களுடைய நிறுவனத் தயாரிப்பான Jet Pack Flying Suit உடையை அணிந்து இந்திய ராணுவத்திற்கு சோதனை செய்து காட்டியவர் இங்கிலாந்து கிராவிட்டி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் ப்ரெளனிங் ஆகும்.

இந்திய தயாரிப்பு Jet Pack Flying Suit உடையை சோதனை முறையில் சரிபார்த்த இந்திய ராணுவம் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்திய

”Jet Pack Flying Suit, for Indian Military purpose, Mfrd. by Startup India ! சஹானா: 90 kmph வேகத்தில் செல்லக் கூடிய jet pack suits. இந்தியாவில் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்ட போது சஹானா: இந்திய இராணுவத்திற்கு சோதனை பயிற்சி வழங்கிய போது” என்பதாக இந்த வீடியோ வைரலாகிறது.

இந்திய
Screenshot From Twitter @DinaShanthi
இந்திய
Screenshot From Facebook/Yuvaraj Raj

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தாய்லாந்தில் ‘ஓம்’ என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரத்தில் பறக்கும் நீருற்று; வைரலாலும் வீடியோவின் உண்மை என்ன?

Fact Check / Verification

இந்திய தயாரிப்பு Jet Pack Flying Suit உடையை சோதனை முறையில் சரிபார்த்த இந்திய ராணுவம் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற நிலையில் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

நம்முடைய தேடலில், குறிப்பிட்ட வீடியோ, Indian Aerospace Defence News (IADN) தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தது. அதில், “நேற்று கிராவிட்டி நிறுவனத்தில் நிறுவனர் ரிச்சர்ட் ப்ரெளனிங், தங்களுடைய ஜெட் பேக் சிஸ்டம் குறித்த சோதனைச் செயல்பாட்டை இந்திய ராணுவத்திற்கு ஆக்ராவில் நிகழ்த்தி காட்டினார். இந்திய ராணுவம் இதுபோன்று 48 JetPack சிஸ்டம்களை கொள்முதல் செய்ய இருக்கிறது” என்பதாக பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து, Chirag Gupta என்பவர் முதலில் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ரிச்சர்ட் ப்ரெளனிங்குடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆக்ராவில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். கிராவிட்டி நிறுவனம், இங்கிலாந்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/chiraggupta1969/status/1630086700700688384?s=20
https://twitter.com/chiraggupta1969/status/1630087610373898242?s=20

எனவே, குறிப்பிட்ட வீடியோ இந்திய ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட சோதனை அல்ல; இந்திய ராணுவத்திற்கு கிராவிட்டி ஏரோஸ்பேஸ் நிறுவனர் ரிச்சர்ட் ப்ரெளனிங் நிகழ்த்திக்காட்டிய Jet Pack Flying Suit சோதனை என்பதும், இவை இந்திய தயாரிப்புகள் இல்லை என்பதும் இதன் மூலமாக உறுதியாகிறது.

Also Read: HAL நிறுவனத்தின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளதா? உண்மை என்ன?

Conclusion

இந்திய தயாரிப்பு Jet Pack Flying Suit உடையை சோதனை முறையில் சரிபார்த்த இந்திய ராணுவம் என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Twitter Post From, Chirag Gupta, Dated February 27, 2023
Twitter Post From, IADN, Dated February 28, 2023
Gravity Twitter Page
Richard M. Browning



உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage