Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்ததாக கலைஞர் தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு கொரானா பரவலின் இரண்டாம் அலை காரணமாக மருத்துவ ஆக்சிஜனின் தேவை மிக அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது.
இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதை இலவசமாக வழங்க தயாராக இருக்கிறோம் என்றும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஆலை நிர்வாகம் கோரியது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதுபற்றி தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.
இதுத் தொடர்பாக கருத்து தெரிவிக்க அனைத்து கட்சிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. இதில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதனிடையே இதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் நேற்று (27/04/2021) நடந்த விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்று மத்திய அரசு வாதிட்டதாக கலைஞர் தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
Archive Link: https://archive.ph/LHmmb
கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட இந்த செய்தியின் அடிப்படையில், பலரும் இத்தகவல் குறித்து தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Archive Link: https://archive.ph/jFYQ5
Archive Link: https://archive.ph/mNXTa
Archive Link: https://archive.ph/qYBVW
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்ததாக கலைஞர் தொலைக்காட்சி வெளிட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இச்செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, உண்மையில் மத்திய அரசு தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதா என்பதைக் குறித்து தேடினோம்.
நம் தேடலில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்ததாக பரப்பப்படும் தகவல் தவறான ஒன்று என்பதை அறிய முடிந்தது.
ஸ்டெலைட் தொடர்பான வழக்கு நேற்று (27/04/2021) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்திற்குதான் தரவேண்டும். தமிழக தேவைக்கு போக, மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்குகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முன்னுரிமை தர முடியாது. மத்திய தொகுப்பில்தான் சேர்க்க வேண்டும் என்று வாதிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த வாதமே தவறான பொருள்படும்படி செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இதுக்குறித்த தெளிவான செய்தி மற்ற ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே, மற்று இங்கே படிக்கலாம்.
ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முன்னுரிமை தர முடியாது. மத்திய தொகுப்பில்தான் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு வாதிட்டதை திரித்து, ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்று மத்திய அரசு வாதிட்டதாக கலைஞர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உண்மையானது மேற்கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகின்றது.
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்ததாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் உங்களுக்கு விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
BBC Tamil: https://www.bbc.com/tamil/india-56899146
Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2757647
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
May 25, 2023
Vijayalakshmi Balasubramaniyan
April 8, 2023
Gayathri Jayachandran
May 14, 2020