சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkகருணாநிதியைத் தோலுரித்த சீமானுக்கு பாராட்டு விழா எடுத்த சுபவீ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கருணாநிதியைத் தோலுரித்த சீமானுக்கு பாராட்டு விழா எடுத்த சுபவீ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கள்ளத்தனம் செய்த கருணாநிதியை தோலுரித்த சீமானுக்கு பாராட்டுவிழா

Fact: வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது. 

கருணாநிதியைத் தோலுரித்த சீமானுக்கு பாராட்டு விழா எடுத்த சுபவீ என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. ”கள்ளத்தனம் செய்த கருணாநிதியை தோலுரித்த சீமானுக்கு பாராட்டுவிழா” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from X @konavayan2023

X Link/Archived Link

Screenshot from x @selvinnellai87

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

கருணாநிதியைத் தோலுரித்த சீமானுக்கு பாராட்டு விழா எடுத்த சுபவீ என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சார்பில், “கலைஞரை இழிவுசெய்யும் கயவர்களே எச்சரிக்கை!கண்டனக் கூட்டம்” என்கிற பெயரிலேயே பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதை நாம் கண்டறிந்த வைரல் புகைப்படத்தின் உண்மையான படத்தில் இருந்து கண்டறிந்தோம்.

மேலும், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் இந்த கண்டனப் பொதுக்கூட்டத்திற்கான அறிக்கை வெளியாகியுள்ளது. சுபவீயின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்திலும் இந்த நிகழ்வு குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், சுப வீரபாண்டியன் பேசிய உரையும் கலைஞர் செய்திகள் உள்ளிட்ட ஊடகங்களில் இடம்பிடித்துள்ளது.

  Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?

Conclusion

கருணாநிதியைத் தோலுரித்த சீமானுக்கு பாராட்டு விழா எடுத்த சுபவீ என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post from dravidam.100, Dated July 12, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular