Claim: கருணாநிதியை திருடன் என்றார் சுப.வீரபாண்டியன்.
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். சீமான் அவ்வாறு கூறியதாகவே சுபவீ கூறினார்.
திமுக ஆதரவாளரான சுப.வீரபாண்டியன் ஒரு வயதான திருடன் மற்றும் அவனின் மகன் குறித்த கதை கூறி, அக்கதையில் வரும் வயதான திருடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், அந்த மகன் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் என்று கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

