Fact Check
பேரறிவாளன் விடுதலையானதால் சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு?
பேரறிவாளன் விடுதலையானதால் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட செய்தியை கேட்டு சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு. கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை” என்று கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமா இது?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பேரறிவாளன் விடுதலையானதால் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் துறை தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து கேட்டதில், வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என உறுதியானது.
இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடகத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இத்தகவல் தவறானது என்று அவர் பதிலளித்தார்.
Conclusion
பேரறிவாளன் விடுதலையானதால் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False/Fabricated Content
Source
Telephonic Conversation with CTR Nirmalkumar, President, Tamilnadu BJP IT Wing
Telephonic Conversation with Sugitha Sarangaraj, News 7 Tamil’s Digital Head
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)