பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது என்று பிரபல பேச்சாளர் சுகி சிவம் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பிரபல சொற்பொழிவாளர் மற்றும் தத்துவவாதியான சுகி சிவம், சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் மறைமலையடிகள் விருது பெற்றவர்.
இந்நிலையில், அவர் பெரியார் குறித்து “பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது” என்று கூறியதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று கூறினாரா அண்ணாமலை?
Fact Check/Verification
பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது என்று பிரபல பேச்சாளர் சுகி சிவம் கூறியதாகப் பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, சொற்பொழிவாளர் சுகி சிவம் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “வணக்கம். என் படத்தையும் பெரியார் அவர்கள் படத்தையும் போட்டு நான் சொல்லாத வாசகத்தையும் போட்டு Facebook இல் ஒரு செய்தி உலா வருகிறது. அது பொய்” என்று தெரிவித்திருந்த பதிவு நமக்குக் கிடைத்தது.
தொடர்ந்து, இதுகுறித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, “குறிப்பிட்ட புகைப்படத்தை யாரோ தவறாக தயாரித்து பரப்பி வருகின்றனர். பெரியார் குறித்து நான் அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை. பரவும் தகவல் தவறானது என்பதை எனது சமூக வலைத்தளத்திலும் விளக்கமளித்துள்ளேன்” என்று கூறினார்.
Conclusion
பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது என்று பிரபல பேச்சாளர் சுகி சிவம் கூறியதாகப் பரவுகின்ற தகவல் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Suki Sivam
Facebook Link
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)