Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்தியில் சரளமாக பேசும் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை
வைரலாகும் வீடியோவில் அவர் இந்தியில் உரையாற்றுவதாக எடிட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியில் சரளமாக பேசும் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“சுந்தர் பிச்சைக்கு இந்தி மொழி தெரியாது என்று உதார் விட்ட பழனிவேல் தியாகராஜன் பன்னாடைக்குஇந்தியில் பேசி பதில் அடி கொடுத்த சுந்தர்பிச்சை” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி விளம்பரம் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இந்தியில் சரளமாக பேசும் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள சுந்தர் பிச்சை இந்தியில் பேசும் பகுதியை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன்முடிவில், கடந்த நவம்பர் 28, 2019ஆம் ஆண்டு திங்க் ரைட் என்கிற யூடியூப் பக்கத்தில் சுந்தர் பிச்சை ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்த நிகழ்வொன்றின் வீடியோ நமக்குக் கிடைத்தது.
அதில், ஒரு பகுதியை எடுத்தே எடிட் செய்து இந்தியில் பின்னணி குரலை அமைத்து அவர் இந்தியில் பேசுவது போல மாற்றியுள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது. மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற Global Entrepreneurship Summit நிகழ்விலேயே இந்த உரையை அவர் ஆற்றியுள்ளார் என்பதும் உறுதியாகியது.
கடந்த 2017ஆம் ஆண்டு IIT கரக்பூரில் பேட்டியளித்த சுந்தர் பிச்சை தான் பள்ளியில் இந்தி படித்திருந்தாலும் அவர் அதிகமாக பேசியதில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: ஆதவ் அர்ஜூனா தவெகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாரா?
இந்தியில் சரளமாக பேசும் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by, GES2016, Dated June 24, 2016
YouTube Video by, BiscootTV, Dated January 10, 2017