குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி விளம்பரம் என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
”குடி பழக்கத்தை ஆதரித்து சன் டிவியின் விளம்பரத்தை பாருங்கள்” என்று இந்த வீடியோ வைரலாகிறது.



X Link/Archived Link
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தாலிபான்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி விளம்பரம் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது சத்யா-தர்ஷன் மற்றும் சத்யா சபரீஷ் என்கிற பெயரில் Instagram-ல் செயல்படும் சத்யா, சபரீஷ் என்கிற கணவன் – மனைவியான கிரியேட்டர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. சமூக வலைத்தள செயல்பாட்டாளர்களான இந்த கணவன் மனைவி இருவரும் இணைந்து குடும்ப நிகழ்வுகளை வீடியோக்களாக நடித்து பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒன்றாக வைரலாகும் வீடியோவும் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ காட்சியில் பின்னால் டிவியில் சன் டிவி தொடர் காட்சி இடம்பெற்றுள்ளது.
அதனால் குறிப்பிட்ட வீடியோவை எடுத்து சன் டிவி குடிப்பழக்கத்தை ஆதரித்து விளம்பரம் வெளியிட்டதாகப் போலியாக பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகியது.
இதுகுறித்து சன்நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது சித்தரிக்கப்பட்ட காட்சி. இதற்கும் சன் டிவிக்கும் தொடர்பில்லை” என்று உறுதி செய்தார்.
Also Read: பெண்களை கிண்டல் செய்தவர்களை உ.பி. போலீஸ் பொது இடத்தில் வைத்து அடித்தனரா?
Conclusion
குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி விளம்பரம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post By, sathya_dharshan_, Dated March 15, 2025
Phone Conversation with, Manoj, Sun News Tamil, Dated March 17, 2025