ஆதவ் அர்ஜூனா விசிகவில் துணை பொதுச் செயலாளராக இருந்தார். அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து ஆறு மாத காலம் விசிகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து கட்சியிலிருந்து முழுவதுமாக விலகுவதாக அறிக்கை விடுத்து விசிகவிலிருந்து விலகினார். பின்பு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தவெகவிலிருந்தும் ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண்களை கிண்டல் செய்தவர்களை உ.பி. போலீஸ் பொது இடத்தில் வைத்து அடித்தனரா?
Fact Check/Verification
தவெகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமாரை தொடர்புக் கொண்டு இதுக்குறித்து கேட்டோம்.
அவர், இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று உறுதி செய்ததோடு, இதுக்குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெளிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நிர்மல்குமாரின் எக்ஸ் பக்கத்தில் ஆராய்கையில் வைரலாகும் தகவல் பொய்யானது என்று தெளிவுப்படுத்தி பதிவு ஒன்றை அவர் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் தகவலில் நியூஸ் ஜே ஊடகத்தின் செய்தி வடிவம் பயன்படுத்தப்பட்டிருப்பதால், நியூஸ் ஜே ஊடகத்தை சார்ந்த தணிகையை தொடர்புக்கொண்டு இதுக்குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் தவறாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்தகவல் பொய்யானது என்று தெளிவுப்படுத்தினார்.
Also Read: இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தாலிபான்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
ஆதவ் அர்ஜூனா தவெகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post by CTR Nirmalkumar, Deputy General Secretary,TVK, Dated March 17, 2025
Phone Conversation With CTR Nirmalkumar, Deputy General Secretary,TVK.
Phone Conversation With NJ Thanigai, News J