Fact Check
இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claim
இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள்
Fact
வைரலாகும் வீடியோ சூரத்தில் நடைபெற்ற மூவர்ணக்கொடி யாத்திரையாகும்.
இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பலூச் சுகந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்றனர் இதுதான் அகண்ட பாரதம்” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மணிப்பூரில் ஆயுதங்களும், பணங்களும் இந்திய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் பின்னணியில் குஜராத் மொழியில் கடைகளில் எழுதப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

எனவே, குறிப்பிட்ட வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ”Bohri Muslim Community Leads Tiranga Yatra in Surat, Gujarat” என்று இடம்பெற்றிருந்த வீடியோ ஒன்று யூடியூப் பக்கத்தில் கிடைத்தது.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கடந்த மே 14 ஆம் தேதியன்று குஜராத் மாநிலம், சூரத் நகரத்தில் நடைபெற்ற திரங்கா (மூவர்ணக்கொடி) யாத்திரையில் தாவூதி போஹ்ராக்கள் என்ற இஸ்லாமிய சமூக மக்களின் ஊர்வலத்தில் பேண்டு வாத்தியம் வாசித்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பது நமக்கு உறுதியாகியது.
மேலும், இந்த பேண்டு வாத்தியக்குழுவான saifeescoutsurat என்கிற சூரத்தைச் சேர்ந்த குழுவினரின் சமூக வலைத்தளப்பக்கத்திலும் “The Tiranga Yatra in Surat was exciting, and the Surat Dawoodi Bohra Band made it even better with their music. Their songs matched the proud feeling of the day. It was great to see and hear!” என்று இந்த நிகழ்வின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வீடியோவே பலுசிஸ்தானில் நடைபெற்ற மூவர்ணக்கொடி ஊர்வலம் என்பதாகப் பரவி வருகிறது. இதுகுறித்த செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணுங்கள்.
Also Read: பாகிஸ்தான் கிரானா மலை மீது இந்தியா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post From, saifeescoutsurat, Dated May 19, 2025
YouTube Video From, VTV Gujarati News and Beyond, Dated May 14, 2025