Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மணிப்பூரில் ஆயுதங்களும், பணங்களும் இந்திய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக பரவும் வீடியோ.
இத்தகவல் தவறானதாகும். மியான்மரில் நடந்த நிகழ்ந்த நிகழ்வை இத்தகவல் பரப்பப்படுகின்றது.
மணிப்பூரில் கடந்த புதனன்று (மே 14, 2025) ஆயுதங்களுடன் சுற்றித்திரித்த படையினரின் மீது இந்திய ராணுவம் நடத்திய நடவடிக்கையால் 10 போராளிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் “இந்திய இராணுவம் மணிப்பூர் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிதங்களும், ரொக்க பணமும்… அடேங்கப்பா எவ்வளவு பணம், துப்பாக்கிகள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
மணிப்பூரில் ஆயுதங்களும், பணங்களும் இந்திய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம். அதில் இந்தியா டுடேவில் மணிப்பூரில் நடந்த ராணுவ நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் மணிப்பூர் போராளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் படமும் இடம்பெற்றிருந்தது. அப்படத்தையும், வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருந்த ஆயுதங்களின் படத்தையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் வேறுபட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் வீடியோவை கூர்மையாக கவனித்ததில், வீடியோவில் காணப்பட்ட வீரர் ஒருவரின் மேற்புற கையில் ‘BNRA’ என்று எழுதப்பட்ட பட்டையை அணிந்திருப்பதை காண முடிந்தது. BNRA (Burma National Revolution force) என்பது மியான்மர் நாட்டை சார்ந்த போராளி படைகளில் ஒன்றாகும்.

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் வீடியோவை InVID உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் பர்மிய மொழியில் இயங்கும் ரெட் நியூஸ் ஏஜென்ஸி எனும் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் மியான்மரின் ஃபலம் நகரில் ஆயுதங்கள் மற்றும் பணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறி வைரலாகும் இதே வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இவ்வீடியோவானது ஏப்ரல் 14, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதாவது மணிப்பூர் சம்பவம் (மே 25, 2025) நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பதிவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் மியான்மரில் நடைப்பெற்று வரும் ஆபரேஷன் CB (Chin Brotherhood) மூலம் ஃபலம் நகரில் பெரும் ஆயுதங்கள், பணங்கள் கைப்பற்றப்பட்டதாக tachileik, Khit Thit Media, Myanmar Now உள்ளிட்ட மியான்மர் ஊடகங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது.
அவற்றை வைரலாகும் வீடியோவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் வீடியோ மியான்மரில் எடுக்கப்பட்டது என உறுதியானது.

Also Read: இந்திய ராணுவத் தாக்குதலால் பாகிஸ்தானில் அணுக்கசிவு என்று பரவும் கடிதம் உண்மையா?
மணிப்பூரில் ஆயுதங்களும், பணங்களும் இந்திய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும். மியான்மரில் எடுக்கப்பட்ட வீடியோவே இவ்வாறு தவறாக பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from India today, dated May 16, 2025
Report from Red News Agency, Dated April 14, 2025
Report from Tachileik News Agency, Dated April 9, 2025
Report from Myanmar Now, Dated April 9, 2025
Report from Khit Thit Media, Dated April 10, 2025
Vijayalakshmi Balasubramaniyan
July 10, 2024
Ramkumar Kaliamurthy
April 29, 2024
Vijayalakshmi Balasubramaniyan
March 7, 2024