Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
` ஜெயவீணா, நடிகர் தலைவாசல் விஜய் மகள், இந்த வருடம் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் பிரிவில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் ’என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா உலகில் மொழி வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் திறமையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் தலைவாசல் விஜய்.
நடிகராக இருந்தபோதிலும் தனது இரண்டு குழந்தைகளையும் அவர்களுடைய திறமைக்கு மரியாதை அளித்து விளையாட்டுத் துறையில் ஜொலிக்கச் செய்துள்ளார்.
இவரது மகள் ஜெயவீணா மற்றும் ஜெய்வந்த் குமார் ஆகிய இரண்டு பேரும் நீச்சல் போட்டியில் திறமைவாய்ந்தவர்களாக வலம் வருகின்றனர். பல்வேறு போட்டிகளிலும் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், தெற்காசிய போட்டியில் இந்த வருடம் பங்கேற்று ஜெயவீணா வெள்ளிப்பதக்கம் வென்றதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படச் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
குறிப்பிட்ட செய்தியுடன் பரவுகின்ற புகைப்படத்தினை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.
அப்போது, தனது தந்தையுடன் ஜெயவீணா இருப்பதாக பரவும் அப்புகைப்படம் 2019 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.
2019ம் ஆண்டு, நேபாளில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட ஜெயவீணா, நீச்சல் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில், 50 கிலோ மீட்டர் நீச்சலடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். இதனை பல முன்னணி ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன.
மேலும், குறிப்பிட்ட புகைப்படத்தில் அவர்களது பின்புறம் இருக்கும் ‘சவுத் ஏசியன் கேம்ஸ் -2019’ என்பது க்ராப் செய்யப்பட்டுள்ளதும் நமக்குத் தெரிய வந்தது.
2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தையே, தற்போது நேபாளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், அதில் ஜெயவீணா பதக்கம் வென்றிருப்பதாகவும் கூறி தவறுதலாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நீச்சல் பிரிவில் இந்த வருடத்திற்கான வெள்ளிப்பதக்கத்தைத் தட்டிச் சென்றதாகப் பரவும் புகைப்படம் கடந்த வருடமே எடுக்கப்பட்டது; பழைய புகைப்படம் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Twitter Profile: https://twitter.com/kayaldevaraj/status/1204817511360778240?s=20
Twitter Profile: https://twitter.com/SPVelumanicbe/status/1205407576361521152?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)