அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனைகளுடன், உயரத்தில் குறைந்த இந்திய வீராங்கனைகள் நிற்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

பதினாறு வயதிற்கு உட்பட்ட கூடைப்பந்து விளையாட்டுப் பிரிவு ஆட்டத்தில் பங்கேற்க அமெரிக்க கூடைபந்து வீராங்கனைகளுடன் இந்திய கூடைப்பந்து வீராங்கனைகள் நிற்பதாகவும், அமெரிக்க வீராங்கனைகள் அனைவரும் 16 வயதிற்கு உட்பட்ட வகையிலேயே உயரமாக இருப்பது போன்றும், இந்திய வீராங்கனைகள் உயரம் குறைவாக இருப்பதாகவும் இப்புகைப்படத்திற்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
“USA under 16 years old vs Indian under 16 years old” என்கிற ஆங்கில அடைமொழியுடன் இப்புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைகளுடன் நிற்கும் இந்திய வீராங்கனைகள் என்று உருவத்தை விமர்சிக்கும் வகையில் வைரலாகும் புகைப்படத் தகவல் குறித்த உண்மையறிய அப்புகைப்படத்தை ரிவர்ச் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அப்போது, நம் தேடலின் முடிவில் அப்புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு சிலி நாட்டில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியின்போது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

குறிப்பிட்ட அந்தப் போட்டியில், தற்போது இந்திய வீராங்கனைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள வீராங்கனைகள் உண்மையில் எல் சால்வடாரின் அணியினர் என்பது நமக்கு உறுதியானது. வைரல் புகைப்படத்தில் அவர்களது உடைகளில் உள்ள எழுத்துக்கள் மறைந்திருந்தாலும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலமாக கிடைத்த செய்திகள் மற்றும் பிற புகைப்படங்கள் மூலமாக இது உறுதியானது.
குறிப்பிட்ட இந்த உயர வித்தியாசம் மற்றும் அமெரிக்க அணி அப்போட்டியில் 114-19 என்கிற விகிதத்தில் வெற்றி பெற்றது குறித்த செய்திகள் மற்றும் சர்ச்சைகளும் அப்போதே எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைகளுடன் நிற்கும் இந்திய வீராங்கனைகள் என்று உருவத்தை விமர்சிக்கும் வகையில் வைரலாகும் புகைப்படத் தகவல் தவறானது; அவர்கள் எல் சால்வடார் வீராங்கனைகள் என்பதை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
USAB: https://www.usab.com/news-events/news/2019/06/wu16-game-2-el-salvador.aspx
Twitter: https://twitter.com/Xirong7/status/1413091654895128577?s=20
US Team: https://www.usab.com/womens/u16/roster.aspx
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)