Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான காட்சிகள் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
இந்தோனேஷிய நிலநடுக்கத்தின் வீடியோ காட்சி என்பதாக தகவல் ஒன்று வைரலாகிய நிலையில் அதுகுறித்து ஆய்வு நடத்தினோம்.
வைரலாகும் பதிவில், “இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பதிவான காட்சிகள். இந்தோனேசியாவின் கரையோரப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” என்கிற தலைப்புடன் குறிப்பிட்ட வீடியோ பரவி வருகின்ற நிலையில் அதனை கீ-ப்ரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அப்போது, குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் தைவானில் எடுக்கப்பட்டவை என்பதாக முடிவுகள் நமக்குக் கிடைத்தன. அதுமட்டுமின்றி, இந்தோனேஷிய நிலநடுக்கம் இரவு நேரத்தில் ஏற்பட்டதாக செய்தியகள் வெளியாகிய நிலையில் குறிப்பிட்ட வீடியோ பகலில் எடுக்கப்பட்டிருந்தது.
தைவான் நிலநடுக்கக் காட்சிகள் என்பதாக இவ்வீடியோ குறித்த பதிவுகள் செப்டம்பர், 2022 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டிருந்ததும் நமக்குத் தெரிய வந்தது. தொடர் தேடலில், கடந்த செப்டம்பர் 19, 2022 ஆம் ஆண்டு Taiwan News வெளியிட்டிருந்த செய்தி கட்டுரை நமக்குக் கிடைத்தது.
அதில், “Video Shows Hikers knocked over by 6.8 quake in Southeast taiwan” என்கிற தலைப்பில் குறிப்பிட்ட வீடியோ குறித்த செய்தி வெளியாகியிருந்தது. அதில், வைரலாகும் வீடியோவில் இருக்கும் நபரின் பெயர் “Kao chien-hsinag” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Panita mountaineering Association of Hualien county என்கிற தைவானின் ஹுலியன் மாவட்ட மலையேற்ற அமைப்பின் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுடைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் லிங்கையும் இங்கே இணைத்துள்ளோம்.
Also Read: கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?
இந்தோனேஷிய நிலநடுக்க காட்சி என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது; குறிப்பிட்ட வீடியோ தைவானில் கடந்த 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Twitter post, From @TaoHongLiu, Dated September 18, 2022
News Article, From Taiwan News, Dated September 19, 2022
YouTube Video, From Taiwan News, Dated September 19, 2022
Facebook post, From Panita mountaineering Association of Hualien county, Dated September 18, 2022
News Article, From Dailysabah, Dated January 09, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)