ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkயூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு; அவரைத் தேடும் பணியில் இரண்டு தனிப்படை என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

mk

யூடியூபர் மாரிதாஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், “ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட பாஜக ஆதரவாளர் யூடியூப் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கினை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனையின்படி மாரிதாஸ் தலைமறைவாகியுள்ளதாக தகவல்” என்பதாக நியூஸ்கார்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot from Twitter @T1ptvyAhbziF8Rp
Screenshot from Twitter @Aathiraj8586

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

Fact Check/Verification

யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு என்பதாக நியூஸ்கார்ட் வைரலாகிய நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்தோம்.

குறிப்பிட்ட நியூஸ்கார்ட், ஜூனியர் விகடன் பெயரில் வைரலாகிய நிலையில் இதுகுறித்து விகடன் டிஜிட்டல் ஹெட் பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

குறிப்பிட்ட நியூஸ்கார்ட் போலியானது; ஜூனியர் விகடன் அவ்வாறு எந்த நியூஸ்கார்டையும் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார். தொடர்ந்து, மாரிதாஸ் குறித்த செய்தி ஏதேனும் இதுபோன்று வெளியாகியிருக்கிறதா என்று தேடியபோது, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குன்னூர் விபத்தில் உயிரிழந்தது தொடர்பான அவரது பதிவு குறித்த வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு என்றே செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read: ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்தேன் என்றாரா உசைன் போல்ட்?

Conclusion

யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு; தேடுதல் பணியில் 2 தனிப்படை என்பதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone Conversation, With I.Britto, Vikatan Digital Head, Dated 10, 2023
News Article, From The Hindu Tamil, Dated 09, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular