Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: அதானி பெயரை கேட்டதும் ஓட்டம் பிடித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் அதானி குறித்த கேள்விக்கு முதலமைச்சர் பதலளித்தே சென்றார்.
“அதானி-னு சொன்ன உடனே பின்னங்கால் பிடறியடிச்சு ஓடுது பொம்மை” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் அதானி குறித்த கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்காமல் செல்வதாய் இருந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Fact Check/Verification
அதானி பெயரை கேட்டதும் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டம் பிடித்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் “கிளம்பிய வேகத்தில் திரும்பிய முதல்வர்.. அதிரடியாக சொன்ன பதில்..” என்று குறிப்பிட்டு புதிய தலைமுறை வீடியோ ஒன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவில் முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்ததை காண முடிந்தது. அப்பேட்டியில் கடைசியில் (01:00 நேரத்தில்) அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டில் சந்தித்ததாக சொல்கிறார்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, பேட்டியை முடித்து சென்ற முதலமைச்சர் திரும்பி வந்து, “துறை அமைச்சரே இதற்கு பதிலளித்துள்ளார், நீங்கள் அதை டிவிஸ்ட் செய்யாதீர்கள்” என்று பதிலளித்திருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து பாமக தலைவர் ராமதாஸ், யாரை சந்தித்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளாரே என பத்திரிக்கையாளர் கேட்க, ‘அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை‘ என்று கூறிவிட்டு முதலமைச்சர் அவ்விடத்திலிருந்து விலகி செல்வதை காண முடிந்தது.
வேறு சில ஊடகங்களிலும் முதலமைச்சரின் இப்பேட்டி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அந்த வீடியோக்களிலும் அதானி குறித்த கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்திருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதன்படி பார்க்கையில் முதலமைச்சர் பதிலளித்த பகுதியை விடுத்து, நிருபர் கேள்வி கேட்ட பகுதி வீடியோவை மட்டும் வைத்து வைரலாகும் தகவல் பொய்யாக பரப்பப்படுகின்றது என தெளிவாகின்றது.
தொடர்ந்து அதானி குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த (02:25 நேரத்தில்) வீடியோ ஒன்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தில் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அதில் அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் கடந்த மூன்று வருடங்களாக எவ்வித வணிகத் தொடர்பும் இல்லை. மத்திய அரசு நிறுவனமான சோலார் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் மட்டுமே 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் தமிழக அரசு செய்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
Also Read: விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டாரா ரஜினி?
Conclusion
அதானி பெயரை கேட்டதும் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டம் பிடித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அதானி குறித்த கேள்விக்கு முதலமைச்சர் பதலளித்ததுடன், அதை தொடர்ந்து பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை குறித்த கேள்விக்கும் பதிலளித்துவிட்டே அவ்விடத்திலிருந்து சென்றுள்ளார்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Youtube Video from Puthiya Thalaimurai, Dated 25 November 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.