செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2021
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2021
HomeFact Checkடாடா குழுமம் 150வது ஆண்டு விழாவிற்காக கார் பரிசளிப்பதாக பரவும் வதந்தி!

டாடா குழுமம் 150வது ஆண்டு விழாவிற்காக கார் பரிசளிப்பதாக பரவும் வதந்தி!

டாடா குழுமம் தனது 150 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தில் அடியெடுத்து வைப்பதால் இலவச கார் தருகிறது. அதற்கு இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள் என்பதாக குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

டாடா

டாடா நிறுவனம் தனது 150வது ஆண்டை நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில் அதன் நினைவாக கார் பரிசளிக்க இருக்கிறது என்பதாக ஃபார்வர்டு மெசேஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த செய்தி தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி மக்களிடையேயும் வைரலாகி வருகிறது.

டாடா
Source: WhatSapp

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?

Fact check/ Verification

டாடா குழுமம் 150வது ஆண்டினை நிறைவு செய்வதை ஒட்டி இந்த லிங்கைக் கிளிக் செய்து கார் வெல்லுங்கள் என்பதாகப் பரவும் குறுஞ்செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட அந்த வைரல் செய்தியில் இரண்டு விதமான இணைப்புகள் பரவி வருகின்ற நிலையில் இரண்டுமே பொய்யாக வடிவமைக்கப்பட்டது; டாடா குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணைப்பு அல்ல என்பது நமக்கு உறுதியானது.

மேலும், இந்த குறிப்பிட்ட செய்தி பரவி வருகின்ற நிலையில் இதுகுறித்து டாடா குழுமம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “#FakeNotSafe
Tata Group or its companies are not responsible for this promotional activity. Please do not click on the link and/or forward it to others.”
என்று குறிப்பிட்ட போலிச்செய்தியை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது.

Source: Twitter

Twitter Link

இதுபோன்று, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வகையில் பல்வேறு செய்திகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாகின்றன. போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்! குறிப்பிட்ட இந்த போலிச்செய்தி குறித்த நியூஸ்செக்கரின் ஆங்கிலம் மற்றும் இந்தி ஃபேக்ட் செக் கட்டுரைகளை இங்கே படியுங்கள்.

Conclusion:

டாடா குழுமம் 150வது ஆண்டினை நிறைவு செய்வதை ஒட்டி இந்த லிங்கைக் கிளிக் செய்து கார் வெல்லுங்கள் என்பதாகப் பரவும் குறுஞ்செய்தி முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

TATA Group Twitter

TATA Official Website

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular