Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: விவேகானந்தரின் தத்துவத்தால் கவரப்பட்டு டாட்டா நிறுவனத்தை ஜாம்செட்ஜி டாடா உருவாக்கினார் என்று பிரதமர் மோடி கூறினார்
Fact: விவேகானந்தர் ஜாம்செட்ஜி டாடாவிடம் பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்குமாறு கூறியதாகவே பிரதமர் பேசினார்
“விவேகானந்தரின் தத்துவத்தால் கவரப்பட்டு டாட்டா நிறுவனத்தை ஜாம்செட்ஜி டாடா உருவாக்கினார் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் டாடா குழுமம் 1868-ல் தொடங்கியபோது விவேகானந்தரின் வயது 5 தான்” என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரதமர் மோடி அலங்கார உடை அணிந்திருப்பதாகப் பரவும் AI உருவாக்க புகைப்படம்!
விவேகானந்தரின் தத்துவத்தால் கவரப்பட்டு டாட்டா நிறுவனத்தை ஜாம்செட்ஜி டாடா உருவாக்கினார் என்று பிரதமர் மோடி கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக மேற்கண்ட கருத்தை பிரதமர் மோடி பேசியுள்ளாரா என தேடினோம். இத்தேடலில் NYOOOZ TV எனும் யூடியூப் பக்கத்தில், Swami Vivekanada urged Jamsetji Tata for ‘Make in India’ : PM Modi எனும் தலைப்பிட்டு செப்டம்பர் 11, 2017 அன்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த வீடியோவின் 4-ஆவது நிமிடத்தில், ‘விவேகானந்தருக்கும் ஜாம்செட்ஜி டாடாவுக்கும் இடையே உள்ள தொடர்பை யார் அறிவார்? அவர்களுக்கு இடையே ஏற்பட்ட உரையாடல் குறித்து யாருக்காவது தெரியுமா? இந்தியா அடிமையாக இருந்த அந்த காலக்கட்டத்தில் 30 வயதேயான விவேகானந்தர் ஜாம்செட்ஜி போன்ற மனிதரிடம் கூறுகிறார், இந்தியாவில் வேலைவாய்ப்பை பெருக்குகள், பொருட்களை இந்தியாவில் தயார் செய்யுங்கள்’ என்று பிரதமர் பேசுவதை காண முடிந்தது.
இதனையடுத்து பிரதமர் கூறியபடி விவேகானந்தருக்கும் ஜாம்செட்ஜி டாடாவுக்கும் இடையே உரையாடல் நடந்ததா என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் இவ்விருவருக்கும் இடையே உரையாடல் நடந்துள்ளது என்பது உண்மையே என அறிய முடிந்தது.
டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் “A Meeting on Board The Empress of India” எனும் தலைப்பில் மார்ச் 03, 2019 அன்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அக்கட்டுரையில் இடம்பெற்றிருந்த ஆடியோ டிரான்ஸ்கிரிப்ஷனில், 1893 மே மாதத்தில் விவேகானந்தரும் ஜாம்செட்ஜி டாடாவும் ஒரே கப்பலில் பயணித்ததாகவும், அப்போது இருவரும் உரையாடல் நடந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும், ஜப்பானிலிருந்து தீப்பெட்டிகளை இறக்குமதி செய்ய நினைத்திருக்கிறேன். புதிய டெக்னாலஜிகள் குறித்து அறிய அமெரிக்கா போகிறேன். இது இந்தியா மிகப்பெரிய தொழிற்சாலை நாடாக மாற உதவும் என்று டாடா அந்த உரையாடலின்போது கூறியதாகவும், அதற்கு விவேகானந்தர் தீப்பெட்டிகளை இறக்குமதி செய்யாமல், அதை இந்தியாவிலேயே உருவாக்கலாம். இதன் மூலம் இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, அவர்களின வாழ்வாதாரம் மேம்படும் என்று ஆலோசனை கூறியதாகவும் அந்த டிஸ்கிரிப்ஷனில் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஐந்து வருடம் கழித்து விவேகானந்தருக்கு டாடா கடிதம் எழுதியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில் ஜனவரி 12, 2018 அன்று டாடாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ‘On the 155th birth anniversary of #SwamiVivekananda, we go back to the days when our founder Jamsetji Tata met Swamiji while they were traveling together in 1893 on a ship to Chicago from Japan. Read through the letter that JN Tata wrote to Swamiji (சுவாமி விவேகானந்தரின் 155வது பிறந்தநாளில், நமது நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா அவர்கள் 1893 ஆம் ஆண்டு ஜப்பானில் இருந்து சிகாகோவிற்கு கப்பலில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தபோது சுவாமிஜியைச் சந்தித்த நாட்களை நினைவு கூர்வோம். ஜே.என்.டாடா சுவாமிஜிக்கு எழுதிய கடிதத்தைப் படித்துப் பாருங்கள்)’ என்று குறிப்பிட்டு, லிங்க் ஒன்றை இணைத்து, பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கையில் டாடா விவேகானந்தருக்கு எழுதிய கடிதத்தின் கையெழுத்து பிரதி அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் படி நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,
Also Read: Fact Check: பிரதமர் மோடியின் 1983ஆம் வருட MA டிகிரியில் 1981ல் இறந்த துணை வேந்தர் கையெழுத்திட்டாரா?
விவேகானந்தரின் தத்துவத்தால் கவரப்பட்டு டாட்டா நிறுவனத்தை ஜாம்செட்ஜி டாடா உருவாக்கினார் என்று பிரதமர் மோடி கூறியதாக வைரலாகும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube Video from NYOOOZ TV, Dated Sep 11, 2017
Article from Tata.com, Dated March 03, 2019
Tweet from @TataSteelLtd, Dated Jan 12, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 10, 2025
Vasudha Beri
April 3, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 20, 2025