Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நேபாளத்தில் அரசுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ.
வீடியோவில் காணப்படுபவர் பத்திரிக்கையாளர் அல்ல. பீகாரை சார்ந்த இந்த நபர் நேபாளத்தில் தேநீர் கடை வைத்துள்ளார். வங்கியில் திருடியதாக சந்தேகப்பட்டு பொதுமக்களால் இவர் தாக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் அரசுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கையாளரை மாணவர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சீமான் பேசும்போது குறுக்கிட்ட விஜய் பாடல்கள்; கடுப்பாகிய சீமான்.. வைரலாகும் வீடியோ உண்மையானதா?
நேபாளத்தில் அரசுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கையாளரை மாணவர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் நேபாள ஊடகமான SPACE 4K Television என்கிற யூடியூப் பக்கத்தில் நேஷ்னல் கமர்ஷியல் பேங்கில் பணத்தை திருடியவரை பொது மக்கள் பிடித்ததாக கூறி வைரலாகும் நபர் குறித்து பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் இதே தகவலை quotes.nepal எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிப்பதையும், அப்பதிவின் கமெண்ட் பகுதியில் மால்ட்டி என்பவர் “தயவு செய்து உதவி செய்யுங்கள். அவர் நேர்மையானவர். அவர் என் தந்தை. அவர் நாசா கல்லூரிக்கு அருகில் கடை வைத்துள்ளார்” என்று ஆங்கிலத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து மால்ட்டியை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசுகையில் வைரலாகும் வீடியோவிலிருப்பவர் பெயர் சத்யநாராயண் சாஹ்னி என்றும், அவர் பீகாரை சார்ந்தவர் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து மால்ட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்ததில் சத்யநாராயண் சாஹ்னி என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை காண முடிந்தது. அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணப்பட்ட புகைப்படங்கள் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபரின் தோற்றத்துடன் ஒத்துப்போனது.

இதனையடுத்து சத்யநாராயண் சாஹ்னியின் சகோதரர் சஞ்சய் சாஹ்னியை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு பேசினோம். அவர் வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் சத்யநாராயண் சாஹ்னிதான் என உறுதி செய்தார்.
சத்யநாராயண் பீகாரின் மதுபானி மாவட்டத்தை சார்ந்தவர் என்றும் அவர் கடந்த முப்பது ஆண்டுகளாக நேபாளத்தின் காத்மாண்டுவில் வசித்து வருகின்றார் என்றும் சஞ்சய் கூறினார். நேபாளத்தில் அவர் சிறிய அளவில் தேநீர் மற்றும் திண்பண்டங்கள் விற்கும் கடையை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சத்யநாராயண் காலையில் நடைப்பயிற்சிக்கு போகும்போது பொதுமக்கள் அவரை பிடித்து, வைரலாகும் வீடியோவை படம் பிடித்ததாக சஞ்சய் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு பின் சத்யநாராயண் காணாமல் போய் விட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
சஞ்சய் சாஹ்னி சத்யநாராயண் சாஹ்னியின் சில புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டையை நமக்கு பகிர்ந்தார். ஆதார் அட்டையை தனிநபர் பாதுகாப்புக்காக எங்களால் பகிர முடியவில்லை. ஆனால் அவர் பகிர்ந்த புகைப்படங்களை காணும்போது வைரலாகும் வீடியோவிலிருப்பவர் சத்யநாராயண் சாஹ்னிதான் என அறிய முடிந்தது.


இதனையடுத்து சஞ்சய் சாஹ்னி நம்முடன் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அவ்வீடியோவில் சத்யநாராயன் குறித்த தகவல்களை அவர் தெரிவித்திருந்தார். கூடவே அவர் குற்றமற்றவர் என்றும் தெரிவித்திருந்தார்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் பத்திரிக்கையாளர் இல்லை என்பதும், வைரலாகும் வீடியோவுக்கும் தற்போது நடந்துக்கொண்டிருக்கும் நேபாள கிளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்பதும் தெளிவாகின்றது.
சத்யநாராயண் சாஹ்னிக்கும் வங்கி திருட்டுக்கும் தொடர்புள்ளதா, இல்லையா என்று நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.
Also Read: பெரியாருடன் விஜய் நிற்கும் சிலை; வைரலாகும் படம் உண்மையானதா?
நேபாளத்தில் அரசுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கையாளரை மாணவர்கள் தாக்கியதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் பத்திரிக்கையாளர் அல்ல. பீகாரை சார்ந்த இந்த நபர் நேபாளத்தில் தேநீர் கடை வைத்துள்ளார். வங்கியில் திருடியதாக சந்தேகப்பட்டு பொதுமக்களால் இவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இதே தகவல் நியூஸ்செக்கர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
Sources
YouTube Video by SPACE 4K Television, dated September 10, 2025
Insta Post by quotes.nepal, dated September 10, 2025
Telephonic Conversation with Satyanarayan Sahni’s Brother Sanjay Sahni