ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeCoronavirusகொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்க்கு ...

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்க்கு ரூ .30,000 சவூதி அரசு அறிவிப்பு உண்மையா ?

உரிமை கோரல் :

இது மக்களுக்கான அரசு

அனைத்து மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை இலவசம், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது இந்திய ரூபாய் மதிப்பில் 30,000 வழங்கப்படும் – சவுதி அரசு

சரிபார்ப்பு :

சவுதி அரேபியாவில் கொரோனா நோயாளிகளுக்கு எந்த மருத்துவமனையாக இருந்தாலும் சிகிச்சை இலவசம் மற்றும் குணமாகி வீடு திரும்பும் போது அவருக்கு இந்திய மதிப்பில் 30,000 ரூபாய் வழங்கப்படுவதாக ஓர் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு லட்சங்களில் செலவு ஆகும் என வெளியான செய்தியால் இப்படியொரு பதிவு வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை  நியூஸ்செக்கரில் கண்டறியத் தொடங்கினோம் .

உண்மைத் தன்மை :

மார்ச் 30-ம் தேதி அல்ஜசீரா எனும் செய்தி இணையதளத்தில் சவுதி அரேபியா நாட்டில் வைரஸ் பாதித்த குடிமக்கள் மற்றும் குடியிருப்பவர்களுக்கு சிகிச்சைக்கான செலவைச் சவுதி மன்னர் சல்மான் ஏற்றுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபீயா கூறியதாகச் செய்தி வெளியாகியது.

https://www.aljazeera.com/news/2020/03/saudi-king-offers-pay-coronavirus-patients-treatment-200330144819569.html

சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் ஒருவருக்குச்  சவுதி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட பரிசு உடன் 1500 சவுதி ரியால் கொடுக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்தத்  தகவலை சவுதியில் உள்ள அசீர் மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளதாக அல் ரியாத் செய்தித்தாள் வெளியிட்ட ட்வீட் பதிவு, அரபு செய்திகளில் மே 18-ம் தேதி வெளியான செய்தியும் கிடைத்தது.

https://gulfnews.com/world/gulf/saudi/watch-saudi-health-ministry-refutes-rumours-of-giving-cash-gifts-to-covid-19-patients-1.71557144

முடிவுரை :

எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் சவூதி  அரேபியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்தன. ஆனால், குணமாகி வீடு திரும்புவோருக்கு இந்திய மதிப்பில் 30,000 வழங்கப்படுவதாகக் கூறும் தகவல் தவறானது.

Sources

  • Google Search
  • Twitter 
  • Facebook
  • News Channel 
  • Newspaper

Result: MISLEADING 

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular