Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி குறித்துத் தவறானப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

மும்பையில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி கடந்த சில தினங்களுக்கு முன் கட்டிட வடிவமைப்பு பொறியாளர் அன்வே நாயக் மற்றும் அவர் தாய் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் #black day for press எனும் ஹேஷ்டேகைப் பயன்படுத்தி சோனியா காந்தி அவர்கள் மாலத்தீவின் முன்னாள் அதிபர் மவ்மூன் அப்துல் காயூம் அவர்களின் மடியில் அமர்ந்தவாறு இருக்கும் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
கூடவே “This is the leader of Sonia Sena who can do anything for money. The most corrupt party who is behind this. என்ற வாசகத்தையும் இப்பதிவில் பதிவு செய்திருந்ததை நம்மால் காண முடிந்தது.
இதைத் தமிழில் மொழிப்பெயர்த்தால், “இந்தத் தலைவர் சோனியா காந்தி பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவர். மிகவும் ஊழல் நிறைந்த கட்சிதான இதற்கு காரணம்” என்பதே அர்த்தமாக வரும்.
இப்பதிவைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகிய இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இதை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு செய்ததில் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து நமக்குத் தெளிவாக அறிய முடிந்தது. உண்மையில் இப்புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்றாகும்.
உண்மையானப் புகைப்படத்தை வாசகர்களின் பார்வைக்காகக் கீழேக் கொடுத்துள்ளோம்.

சோனியா காந்தி அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டில் மாலத்தீவின் அதிபராக இருந்த மவ்மூன் அப்துல் காயூம் அவர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்டப் புகைப்படத்தையே தவறான முறையில் எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் தற்போது பரப்பி வருகின்றனர்.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படத்தையும் எடிட் செய்யப்பட்டப் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


சமூக வலைத்தளங்களில் சோனியா காந்தி குறித்துப் பரவும் புகைப்படம் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மைய நியூஸ் செக்கர் தமிழின் விரிவான விசாரணையின் மூலம் தெளிவாக விளக்கியுள்ளோம்.
ஆகவே இத்தகவலை வாசகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
Twitter Profile: https://twitter.com/arnabofficial9/status/1324004360716603392
Twitter Profile: https://twitter.com/yuvrajuv444/status/1324028454413590529
Getty Images: https://www.gettyimages.in/detail/news-photo/president-of-the-republic-of-maldives-maumoon-abdul-gayoom-news-photo/52489969
Twitter Profile: https://twitter.com/adorable_311/status/1324033504351383552
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)