Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து ஒரு தவறானப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் சனாதர்மத்தில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ள விதிகள் குறித்துப் பேசினார். இப்பேச்சானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சனாதர்மத்தில் இருப்பதாக திருமாவளவன் கூறியக் கூற்றுகளை வைத்து, அவர் பெண்களை இழிவாகப் பேசிவிட்டார் என்று அவருக்கெதிராக கண்டனங்களும் போராட்டங்களும் வெடித்துள்ளது.
இப்பேச்சின் காரணமாக இவர்மேல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தவிர்த்து, சமூக வலைத்தளங்களில் பலர் திருமாவளவன் குறித்து பல அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். அதில் ஒன்றாக அவர் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண்ணின் பக்கத்தில் நிற்குமாறு இருக்கும் படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்து ஆராய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்ற உண்மை நமக்குத் தெரிய வந்தது.
திருப்பூரில் பாஜக பிரமுகர் ஒருவர் இளம்பெண்களை வைத்து தொழிலதிபர்களை மயக்கி பணம் பறித்துள்ளார். அவர் ஒரு பெண்ணுடன் அரைகுறை ஆடையுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அப்புகைப்படங்கள் பார்வைக்காக:
இப்புகைப்படங்களில் இருக்கும் பாஜக பிரமுகரின் தலைக்கு பதிலாக, திருமாவளவன் அவர்களின் தலையை மாற்றி வைத்து, அப்புகைப்படத்தையேத் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
வாசகர்களில் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படத்தையும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
சமூக வலைத்தளங்களில் திருமாவளவன் குறித்துப் பரப்பப்படும் புகைப்படமானது எடிட் செய்யப்பட்டது என்பதையும் அப்புகைப்படத்தில் இருப்பவர் உண்மையில் திருமாவளவன் இல்லை என்பதையும்ம் நியூஸ்செக்கர் தமிழின் விரிவான ஆய்வின் மூலம் விளக்கியுள்ளோம். ஆகவே வா சகர்கள் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Twitter Profile: https://twitter.com/prwI4zklV3zlO72/status/1319323439031676928
Twitter Profile: https://twitter.com/nagarajanoffici/status/1319615532333748224
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 2, 2025
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
December 16, 2024