Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
உரிமை கோரல் :
ஏழை மக்களின் நலனுக்கான நல்லெண்ணத் தூதராக மதுரை மாணவி நியமனம் #Madurai
சரிபார்ப்பு :
மதுரையில் சலூன் கடையை நடத்தி வரும் சி.மோகன் தங்கள் பகுதியில் வசித்து வந்த பல ஏழை மக்கள் ஊரடங்கால் படும் கஷ்டத்தை அறிந்து தனது மகளின் படிப்பிற்காகச் சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை முழுவதுமாக மக்களுக்காகச் செலவு செய்தார். அவரின் மகளும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். அவரின் சேவை மனப்பான்மையைப் பிரதமர் மோடி ” மனதின் குரல் ” நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசி இருந்தார்.
பிரதமர் பாராட்டிய சலூன் கடைக்காரர் என ஊடகங்களில் வெளியாகி பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதையடுத்து, மதுரை மாவட்ட பாஜகத் தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மோகனை நேரில் சந்தித்துப் பாராட்டியதோடு அவரது குடும்பத்தினருக்கே பாஜகவின் உறுப்பினர் அட்டையை வழங்கி விட்டுச் சென்றுள்ளனர். இதன்பிறகு, பிரதமரால் பாராட்டப்பட்ட மோகன் குடும்பம் பாஜகவில் இணைந்ததாகச் செய்திகள் வெளியாகியது. அதற்கு உடனடியாக மோகன் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததும் செய்தியாக வெளியாகி இருந்தது.
உண்மை தன்மை :
ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரரின் மகள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
பாலிமர் செய்திச் சேனல் வெளியிட்ட செய்தியில் அது உண்மை என்பது போலவே வெளியிட்டு இருந்தார்கள்.
நியூஸ் 7 தமிழ் சேனலும் இந்த போலி செய்தியை வெளியிட்டிருந்தது.
நியூஸ்18 தமிழ், புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைக்காட்சியும் இதனை வெளியிட்டிருந்தது. உண்மையில், ஐக்கிய நாடுகளின் சபை அப்படியான ஓர் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. மாணவி நேத்ராவை நல்லெண்ணத் தூதராக நியமித்துள்ளது UNADAP (மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம்) என்கிற ஓர் அரசு சாரா அமைப்பு.
இது ஐ.நா., சபையின் கிளை நிறுவனமோ அல்லது துணை அமைப்போ அல்ல. இந்நிறுவனத்தின் இலச்சினையும ஐ.நா., சபையின் இலச்சினையும் வேறு. UNADAP நிறுவனம்தான் மாணவி நேத்ராவுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான உதவித்தொகையையும் அளித்துள்ளது.
ஐ.நா., சபை எவ்வித உதவித்தொகையும் அறிவிக்கவில்லை. “நாங்கள் ஒரு அரசு சாரா அமைப்பு, ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக மன்றத்தின் (UNECOSOC) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். UNADAP என்பது ஒரு ஐ.நா. நிறுவனம் அல்ல,” என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
முடிவுரை :
எங்களின் ஆராய்சிக்குப் பின்னர் ஐ.நா.சபை எவ்வித உதவித்தொகையும் அறிவிக்கவில்லை.UDADAP ஒரு அரசு சாரா அமைப்பு, ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக மன்றத்தின் (UNECOSOC) அங்கீகாரத்தை பெற்றுள்ளது என்று தெரிய வந்துள்ளது .
Sources
Result: False
(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
.
Vijayalakshmi Balasubramaniyan
June 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 23, 2025