Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு 2020 ஆம் ஆண்டின் பழைய நியூஸ்கார்டாகும். அச்சமயத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கே திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
“நாடாளுமன்றத்தில் அரியலூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வேண்டுமென குறலெழுப்பி பெற்றுத் தந்தவர்…#எழுச்சித்தமிழர். ஆனால்…இந்த அரசு கூட்டணியில் இருந்தும் இப்படி…இதுதான் #சமூக_நீதி_திராவிட_மாடலா???????” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில் கூட தகவல் இல்லை. இது மாநில அரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? முதல்வரின் பார்வைக்கு” என்று விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாக வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்டில் அரியலூர் மாவட்ட மருத்துவ கல்லூரியின் அடிக்கல் நாட்டு விழா குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று திருமாவளவன் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அரியலூர் மருத்துவ கல்லூரிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே அச்சமயத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது என நம் தேடலின் வாயிலாக அறிய முடிந்தது.
இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது வெளிச்சம் டிவி இணைய ஊடகத்தின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டில் இருப்பதால், அந்த ஊடகத்தில் இவ்வாறு நியூஸ்கார்டு வெளியிடப்பட்டுள்ளதா என தேடினோம்.
இத்தேடலில் அந்த ஊடகமானது நான்கு வருடங்களுக்கு முன்பு ஜூலை 06, 2020 அன்று வைரலாகும் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் திருமாவளவனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த நியூஸ்கார்டு அதே தினத்தில் (ஜூலை 06, 2020) பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் இந்த நியூஸ்கார்டானது தற்போதையது அல்ல, நான்கு வருடங்களுக்கு முந்திய பழைய நியூஸ்கார்டு என தெளிவாகின்றது.
அதேபோல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததும் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலுனுக்கு அல்ல, 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கே என்பதும் தெளிவாகின்றது.
இதனையடுத்து தேடுகையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக பரவும் செய்தி தவறானது என்று வெளிச்சம் டிவி அதன் எக்ஸ் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்ததையும் காண முடிந்தது.
Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்டு 2020 ஆம் ஆண்டின் பழைய நியூஸ்கார்டாகும். அச்சமயத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கே திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த கார்டை தற்போது பகிர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக தவறான தகவல் பரப்பப்படுகின்றது. இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post from Thirumavalavan, Chairman, VCK, Dated July 06, 2020
X Post from Velicham TV, Dated July 06, 2020
X Post from Velicham TV, Dated July 12, 2024
Report from Dinamani, Dated July 07, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 4, 2025