Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கைப்பேசி கோபுரம் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர். 1400 வருட பழமையான மண்டபம் மேல் வைக்க தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரிடம் அனுமதி பெற்றனரா? நம்மாழ்வார் பாடிய கோவில் மண்டபத்தில் வாடகை சம்பாதிக்க இந்து அறநிலையத்துறை அராஜகம்!” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கைப்பேசி கோபுரம் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
சென்ற வருடம் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்தே இந்துகளுக்கு எதிராகவும், கோயில்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்ற நிலையில், வைரலாகும் படத்தில் இருக்கும் இரும்பு கோபுரம் சமீபத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றப்பிறகு வைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திருமோகூர் கோவில் படம் ஒன்றிலேயே இந்த இரும்பு கோபுரம் இருப்பதை காண முடிந்தது. இதன் அடிப்படையில் பார்க்கையில் இந்த கோபுரம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வைக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகியது.
இதனையடுத்து வைரலாகும் படத்தில் இருக்கும் இரும்பு கோபுரம் உண்மையிலேயே கைப்பேசி கோபுரம்தானா? இது எப்போது வைக்கப்பட்டது என்பது குறித்து தேடினோம்.
இத்தேடலில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் தவறானது என்றும், வைரலாகும் படத்தில் இருக்கும் கோபுரம் கைப்பேசி கோபுரம் அல்ல, அது கோபுர பாதுகாப்புக்காக 2014 ஆம் ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் பொருத்தப்பட்ட இடிதாங்கி கோபுரம் என்றும் தெளிவுப்படுத்தி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இப்பதிவில் இடிதாங்கி பொருத்துவது தொடர்பாக இந்து அறநிலையத்துறை வெளியிட்ட ஒப்பந்த அறிக்கையையும் வெங்கடேசன் பகிர்ந்திருந்தார்.
Also Read: ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்றாரா கனிமொழி?
மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கைப்பேசி கோபுரம் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதும், உண்மையில் அது கைப்பேசி கோபுரம் அல்ல, இடிதாங்கி கோபுரம் என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Sources
Tweet from Su.Venkatesan, MP, Madurai Constituency, tweeted on 21/06/2022
Tender Document Shared by Su.Venkatesan
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 23, 2025