Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திருமலையை நடந்து அடைய ஏற்கனவே உள்ள 6588 படிகளுக்கு பதிலாக 2388 படிகளுடன் புதிய வழியை உருவாக்கியுள்ள ரிலையன்ஸ் என்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோவில் கொண்டிருக்கும் திருமலைக்கு மலைப்பாதை வழியாக வாகனங்களில் செல்ல முடியும் என்றாலும், புரட்டாசி உள்ளிட்ட வைணவ பக்தர்களுக்கான மாதங்களில் திருமலைக்கு படியேறி சென்று பெருமாளை தரிசிப்பதை பலரும் வேண்டுதலாகவே செய்து வருவர்.
திருப்பதியிலிருந்து படிகள் வழியாக செல்ல இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று அலிபிரி மலைப்பாதை. மற்றொன்று சீனிவாசமங்காபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீவாரி மெட்டு.
இந்நிலையில், “திருமலையில் பழைய பாதையில் 6588 படிகளுக்கு பதிலாக, தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்துள்ள 2388 படிகள் மட்டுமே ஏறி திருமலையை சீக்கிரமே அடைய முடியும். படிகள் வழியாக திருமலையை அடைய ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்தத் தகவலைப் பரப்புங்கள். ஶ்ரீ வெங்கடேசாய நமஹ” என்கிற செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று சொன்னாரா டிஆர்பி.ராஜா?
திருமலையை நடந்து சென்று அடைந்து சாமி தரிசனம் செய்ய 6588 பழைய படிகளுக்கு பதிலாக 2388 படிகள் உள்ள புதிய வழியை ரிலையன்ஸ் அமைத்துள்ளதாகப் பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக, ஸ்ரீவாரி மெட்டில் இருந்து ரிலையன்ஸ் அமைத்துள்ள புதிய வழி என்று பரவும் தகவல் தவறானது. ஸ்ரீவாரி மெட்டில் இருந்து அமைந்துள்ள படிவழிப்பாதை 2388 படிகளுடன் திருமலையை அடைய பலவருடங்களாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சிறிய தூரம் கொண்ட வழியாகும்.
திருமலையின் புராதன வரலாற்றின்படி, ஸ்ரீனிவாசப் பெருமான் அவருடைய திருமணத்திற்கு ஆறுமாதங்களுக்குப் பிறகு திருமலையை அடைய உபயோகித்த வழி இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் ஸ்ரீவாரி மெட்டின் தூரம் கிட்டதட்ட 2.10 கிமீ என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிகள் மூலமாக ஒன்றரை மணி நேரத்தில் திருமலையை அடைய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பதிவில் சொல்லப்பட்டுள்ளது போன்று மற்றொரு மலைவழிப்படிப்பாதையான அலிபிரி மெட்டுப் பாதை 6588 படிகள் கொண்டது அல்ல. திருமலையை அடைய 6588 படிகளுடன் எந்தவொரு மலைவழிப்படிப்பாதையும் அமைந்திருக்கவில்லை. அலிபிரி மெட்டு பாதையில் அமைந்திருக்கும் படிகளின் எண்ணிக்கை 3550 ஆகும்.
தொடர்ந்து, ரிலையன்ஸ் குறித்த செய்திகளைத் தேடியபோது அலிபிரி பாதை படிகளின் சீரமைப்பு மற்றும் மேற்கூரை சீரமைப்பிற்கு சில கோடிகள் செலவாகும் என்று தேவஸ்தானம் தரப்பில் ஆய்வு செய்த நிலையில் அதற்கான செலவுகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அது அலிபிரி வழிப்பாதைக்கு என்பதாகவே செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமலையை நடந்து சென்று அடைந்து சாமி தரிசனம் செய்ய 6588 பழைய படிகளுக்கு பதிலாக 2388 படிகள் உள்ள புதிய வழியை ரிலையன்ஸ் அமைத்துள்ளதாகப் பரவுகின்ற தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
TTD Official
ThirumalaThirupathi.com
TTV Seva
Ganesh Raghav
Ulagam Sutralam Vaanga
Sakshi TV
The Hans India
NewIndian Express
Times of India
Deccan Herald
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
September 27, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2024
Ramkumar Kaliamurthy
March 29, 2023