திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காகாலி கோஷ் தாஸ்டிதர் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் மிரட்டி உட்கார சொன்னதாகவும், அமித் ஷா அதற்கு பயந்து உட்கார்ந்ததாகவும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம் உண்மையானதா?
Fact Check/Verification
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காகாலி கோஷ் தாஸ்டிதர் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் மிரட்டி உட்கார வைத்ததாக பரப்பப்படும் வீடியோவின் 2 ஆவது வினாடியில் அமித் ஷா சாம்பல் நிறத்தில் ஜாக்கெட் அணிந்திருப்பதையும், 22 ஆவது வினாடியில் நீல நிறத்தில் ஜாக்கெட் அணிந்திருப்பதையும் காண முடிந்தது.

இதன்படி பார்க்கையிலேயே இவ்வீடியோவானது எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது. இதை முறையாக உறுதி செய்ய காகாலி கோஷ் விரல் நீட்டி எதிரே இருப்பவரை உட்கார சொல்லும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் சன்சத் டிவி யூடியூப் பக்கத்தில் “Dr. Kakoli Ghosh Dastidar | Discussion under Rule 193 on price rise”என்று தலைப்பிட்டு ஆகஸ்ட் 1, 2022 அன்று காகோலி கோஷ் பேசும் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவின் 12:35 நேரத்தில் காகோலி கோஷ் எதிராளியை அமரச் சொல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. இவ்வீடியோவில் அமித் ஷா குறித்த எவ்வித கட்சியும் இடம்பெற்றிருக்கவில்லை.
இதனையடுத்து அமித் ஷா அமரும் காட்சி குறித்து தேடினோம். அத்தேடலில் “Union Home Minister Amit Shah’s statement in Rajya Sabha over attack on convoy of Asaduddin Owaisi” ”என்று தலைப்பிட்டு சன்சத் டிவி யூடியூப் பக்கத்தில் பிப்ரவரி 7, 2022 அன்று வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவின் இறுதிக்கட்டத்தில் (3:41 நேரத்தில்) மத்திய அமைச்சர் உரையை முடித்து உட்காரும் காட்சி வைரலாகும் வீடியோவின் காட்சியுடன் ஒற்றுப்போவதை காண முடிந்தது.
Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காகாலி கோஷ் தாஸ்டிதர் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் மிரட்டி உட்கார வைத்ததாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்றாக சேர்த்து இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் அக்டோபர் 28, 2024 அன்று தனுஜித் தாஸால் எழுதப்பட்டுள்ளது)
Sources
Youtube Video from Sansad TV, dated August 1, 2022
Youtube Video from Sansad TV, dated February 7, 2022
Self Analysis