Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவிருக்கின்றது.
இத்தகவல் தவறானது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுத்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இத்தகவல் தவறானது என்று மறுத்துள்ளார்.
வரும் ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு பரசீலித்து வருவதாக சன் நியூஸ், தினகரன் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


இச்செய்தியை அடிப்படையாக வைத்து பலரும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.


Also Read: மதுரை முருகன் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இத்தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்து அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
“இந்திய அரசு இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெளிவுபடுத்த விரும்புகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை” என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் வைரலாகும் தவறானது என்று மறுப்பு தெரிவித்து அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
“சில ஊடகங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கவிருப்பதாக தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் முழுமையான விலக்கு தொடரும். உண்மைத்தன்மையை ஆராயாமல் தவறான செய்திகளைப் பரப்பி, அதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடகத்திற்கு அடையாளம் அல்ல. இதை நான் கண்டிக்கிறேன்” என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் இந்திய அரசின் சென்னை பத்திரிக்கை தகவல் அலுவகமும் இத்தகவல் தவறானது என்று தெளிவுப்படுத்தி அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: இஸ்ரேல் அதிபர் மகனை இஸ்ரேல் மக்கள் அடித்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையா?
ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் வந்த செய்தி முற்றிலும் தவறானதாகும்.
இத்தகவல் தவறானது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுத்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இத்தகவல் தவறானது என்று மறுத்துள்ளார்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post from National Highways Authority of India, dated June 26, 2025.
X post from Nitin Gadkari, Minister of Road Transport & Highways, Government of India, dated June 26, 2025.
X post from PIB in Tamil Nadu, dated June 26, 2025.