ரயில்களில் தட்கல் முன்பதிவு நேரம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ரயில் பயணிப்பவர்களின் கவனத்திற்கு. வரும் 15 ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. கவனத்தில் கொள்க.” என்று இந்த தகவல் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தாரா ஜெயக்குமார்?
Fact Check/Verification
ரயில்களில் தட்கல் முன்பதிவு நேரம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
தட்கல் முன்பதிவு நேர மாற்றம் குறித்து ஏதேனும் அறிவிப்பு IRCTC வெளியிட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தபோது ”தட்கல் மற்றும் பீரிமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் பரவும் செய்திகள் போல எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் 11, 2025 அன்றே PIB பக்கத்திலும் “தட்கல் முன்பதிவு நேரங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பரவும் தகவல் போலியானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: வக்பு மசோதாவுக்கு எதிராக பிரியங்கா காந்தி போராடியதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
ரயில்களில் தட்கல் முன்பதிவு நேரம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post by, IRCTC, dated April 11, 2025
X Post by, PIB, Dated April 11, 2025