Fact Check
வக்பு மசோதாவுக்கு எதிராக பிரியங்கா காந்தி போராடியதாக பரவும் வீடியோ உண்மையானதா?

Claim
வக்பு மசோதாவுக்கு எதிராக பிரியங்கா காந்தி போராடியதாக பரவும் வீடியோ.
Fact
பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாக 2022 ஆம் ஆண்டில் பிரியங்கா காந்தி போராடிய போராட்ட வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா கறுப்பு சட்டை அணிந்து போராடியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தாரா ஜெயக்குமார்?
Fact Check/Verification
வக்பு மசோதாவுக்கு எதிராக பிரியங்கா காந்தி போராடியதாக பரப்பப்படும் வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்து, அவ்வீடியோ குறித்து தேடினோம்.இத்தேடலில் மனீஷ் திவாரி என்பவர் ஆகஸ்ட் 05, 2022 அன்று அவரது எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவை பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடுகையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே பிரியங்கா காந்தி மற்ற தலைவர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி டைம்ஸ் ஆஃப் இந்தியா அதன் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் வீடியோவுக்கு ஒத்த மற்றொரு வீடியோவை பகிர்ந்திருந்ததை காண முடிந்தது. இப்பதிவானது ஆகஸ்ட் 05, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஜிடிபி சரிவு, பணவீக்கம், ஜிஎஸ்டி வரிவிகிதம், மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி NDTV செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் மேலும் சில ஊடகங்கள் இந்த போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ பழைய வீடியோ என்பதும், வீடியோவில் காணப்படும் சம்பத்திற்கும் வக்பு மசோதாவிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதும் தெளிவாகின்றது.
Conclusion
வக்பு மசோதாவுக்கு எதிராக பிரியங்கா காந்தி போராடியதாக பரப்பப்படும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாக பிரியங்கா காந்தி போராடிய போராட்ட வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by the user named Manish Tiwari, dated August 5, 2022
Report by The Times Of India, dated August 5, 2022
Report by NDTV, dated August 5, 2022