Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை; இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை என்று திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இளம் பெண்கள் பலரும் கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், மகளிர் அணியில் இணைய வேண்டிய அவர்கள் இளைஞர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் திமுக எம்.பி கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே உட்கட்சிப் பூசல் நிகழ்வதாகவும் கூறி செய்திகளும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், “மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை. இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை. மகளிர் அணி செய்ய தவறியதை தான் நான் செய்கிறேன். திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கோழிகள் அதிக புழுக்களைத் தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் என்றாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?
Fact check/Verification
மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்பதாக திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக, குறிப்பிட்ட நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் பரவினாலும் அதன் எழுத்துரு மற்றும் வண்ணம் வேறுபட்டு காணப்பட்டது. எனவே, தந்தி டிவி தரப்பில் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று நமக்கு உறுதி செய்தனர்.
மேலும், இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயலாளர் செந்தில்குமாரை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது, குறிப்பிட்ட செய்தி தவறானது; சித்தரிக்கப்பட்டது என்பதை அவர் நமக்கு உறுதி செய்தார்.
Conclusion
மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்பதாக திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.