ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkமேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும் என்றாரா பாஜக உமா ஆனந்தன்?

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும் என்றாரா பாஜக உமா ஆனந்தன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும் என்று மேற்கு மாம்பல 134-ஆவது வார்டில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும்  என்று உமா ஆனந்தன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் மேற்கு மாம்பலம் 134-ஆவது வார்டில் பாஜகவைச் சேர்ந்த உமா ஆனந்தன் என்பவர் வெற்றி பெற்றார்.

இவர் சாதி குறித்தும் மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய பல கருத்துகளை பொது மேடைகளில் பேசியுள்ளார். கூடவே நான் கோட்சே ஆதரவாளர் என்றும் பேசியுள்ளார்.  இந்நிலையில் மேற்கு மாம்பல பகுதியில் இவர் கவுன்சிலரானதை தொடர்ந்து, மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும் என்று இவர் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும்  என்று உமா ஆனந்தன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும்  என்று உமா ஆனந்தன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும்  என்று உமா ஆனந்தன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: கட்சியை கலைக்கப்போகிறேன் என்றாரா சீமான்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும் என்று உமா ஆனந்தன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை கதிர் நியூஸ் வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் இந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து கதிர் நியூஸைச் சேர்ந்த பிரதீப்பைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை.” என்று விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல்குமாரைத் தொடர்புக் வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, இத்தகவல் முற்றிலும் பொய்யானது என உறுதி செய்தார்.

Also Read: ‘ஊழலை விட பாஜக எதிர்ப்பே முக்கியமானது’ என்றாரா திருமாவளவன்?

Conclusion

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும் என்று உமா ஆனந்தன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Nirmalkumar, BJP

Pradeep, Kathir News

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular